பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 அகத்திணைக் கொள்கைகள் பெண் மக்களின் ஒழுக்கத்திற்கும் பெற்ற தாயே பெருங்காப் பாளியாக அமைகின்றாள். எத்தவறு நேரினும் 'இவள் வளர்த்த கு. இது என்று ஊரார் தாய்மீதே பழிசுமத்துதல் இயல்பாக இருந்து வருகின்றது. இது கேட்ட அன்னை நானுவாளேயன்றிப் பொறுப்பு தனக்கில்லை என்று தட்டிக் கழிக்கும் வழக்கம் அவளிடம் இல்லை. களவில் ஒழுகும் குமரி பெற்றோரை அஞ்சு வாள் எனத் தந்தையையும் உளப்படுத்திப் பொதுப்படச் சொல்லி ஓம் அது ஈன்றவளையே சிறப்பாகக் குறிக்கும். ஊர்ப் பெண்டிர் 'இன்னவள் மகள்' என்று தாயைச் சுட்டி மகளைக் சுட்டி யுரைப்பதுதான் நம் சமுதாய மரபாக இருந்து வருகின்றது. எனவே, தன் மகள்பற்றி அலர் எழுந்த காலத்து மனங்கசப்ப வளும் மனங் கொதிப்பவளும் தாயே யாவள். உடன்போக்குத் இறைப்பற்றி வரும் பாடல்களையெல்லாம் ஒரு சேரத் தொகுத்து நோக்கினால், அப்போக்கிற்குத் தாயே முதற்காரணமாவாள் என்பது தெள்ளிதின் புலனாகும். - அழுங்கல் மூதூர் அலர்எழச் செழும்பல் குன்றம் இறந்தளன் மகளே' {அழுங்கல்-ஆரவாரம் செழும்பல்-வளப்பம் மிக்க இறந்தகடந்த} என்று ஐங்குறு நூற்றுத் தாய் ஒருத்தி அலரச்சத்தால் தன் மகள் உடன் போகலாயிற்று என்று கூறினாலும், அலர் கேட்டு அன்னை சீறுவாள் என்ற தாயச்சமே முடிவான காரணம் என்பது உய்த் திரைற்பாலது. காதற் சுழியில் சிக்கிய குறுந்தொகைத் தலைவி ஒருத்தியின் துணிவு வியத்தற்குரியது. ஊர்உர் அலர்எழச் சேரி கல்லென ஆனாது அலைக்கும் அறனில் அன்னை தானே இருக்க தன்மனை யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க உணலாய்ந் திசினால் அலரொடு சேய்நாட்டு விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅன் கரும்புநடு பாத்தி யன்ன "-"κκ τωνπακα, பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. 217 ஐங்குறு-372. 218. குறுந்-262