பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் புலப்படுத்தலையும் கண்டு தெளியலாம். அகத்திணைப் பாடல் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என நான்கு இயல்கள் வகுத்து, அகத்திணை நெறியினைத் தெளிவு பட விளக்கியுள்ளார். புறத்திணைப் பொருளை ஒரே இயலில் அவர் விளக்கியதும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. ஆரிய அரசன் பிரகத்தனு க்குத் தமிழின் தனிச் சிறப்பை அறிவுறுத்த விரும்பிய சங்கப் புலவராகிய கபிலர் பெருமான் அவனுக்கென்றே குறிஞ்சிப் பாட்டு என்ற அகத்திணைப் பாவினை யாத்தனரேயன்றி புறப் பாட்டொன்றை யாத்தனர் அல்லர். காரணம் என்ன? தமிழ் மொழியின் தனிவீற்றினைப் பிற மொழியாளர் உணர வேண்டு மேல் அவர்கள் முதலில் அறிய வேண்டும் பொருள் அகப்பாட்டே என்று கருதியதேயாகும். அறிவியலாசிரியர் தாமே தம் செய் திறனால் கருவியொன்று சமைத்துச் சில அறிவியல் மெய்ம்மை களை விளக்குவதுபோல் ஆசிரியப் பெருந்தகையான கபிலரும் தாமே பாவியற்றி அதனைக் கொண்டே அகத்தினை நெறியின் உயிரனைய கருத்தினை அவ்வரசனுக்குத் தெளிவுறுத்தினார். அகத்திணையின் சிறப்பு வேறு சில குறிப்புகளாலும் அறியப் பெறும். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது' என்ற குறிஞ்சிப் பாட்டின் துறைக்குறிப்பும், இந்நூல் என் துதலிற்றோ எனின், தமிழ் நுதலியது' என்ற இறையனார் களவியலுரையாசிரியன் குறிப்பும் ஒண்தீந் தமிழின் துறைவாய் துழைந்தனையோ?” என்ற திருக்கோவையார் பாடலடியும் இதன் சிறப்பினைப் புலப்படுத்துவதைக் காணலாம். இந்த மூன்று இடங்களிலும் தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் அறியப்பெறும். ஒரு மொழியின் பெயர் அம்மொழியின்கண் தோன்றியுள்ள பல்வகை இலக்கியங்களுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டிலும் பெயராய் ஆளப்பெறு மாயின் அந்த இலக்கிய வகை அம்மொழியிலன்றிப் பிற எம்மொழி யிலும் காண்டற்கில்லை என்பது தெளிவாகின்றதன்றோ? இதனால் உலகில் நின்று நிலவும் மொழிகளுள் தண்டமிழ் மொழியின் தனிச் சிறப்பும் தமிழிலக்கிய வகைகளுள் அகத் திணையின் முதற் சிறப்பும் வெள்ளிடை விலங்கலெனத் தெரி: கின்றதல்லவா? குன்றம் பூதனாரின் செவ்வேள்பற்றிய பாடலொன்றின், 2. இறை, கள, முதல் நூற்பாஉரை-பக் 14 3. திருக்கோ-20 . . . .