பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-13 களவியல் மரபுகன் களவில் வரும் நிகழ்ச்சிகளை நோக்கின் அவை கற்பனையால் விரிக்கத் தக்கனவாகக் காணப்பெறும். ஆயினும், அவை ஒரு நெறிக்குள் அடங்கியே செல்லும். அந்த நெறியில் சில மரபுகள் உள்ளன. அவை: - 1. ஒர் இளைஞன் தான் காதலித்த நங்கையைக் அவள் பெற்றோர் இசையாமை காரணமாகவோ, அல்லது அழகும் செல்வமும் மிக்க மற்றொரு நங்கையைக் கண்டதன் காரணமாக வோ முன்னவளைக் கைவிட்டுப் பின்னவளைப் பற்றிக் கொண் டான் என்ற மரபு இங்கு இல்லை. 2. தோழியைத் துணையாகக் கொண்டு தலைவியை அடைய முயலும் தலைவன் அவளைப் பகற் குறியிலும் இரவுக் குறியிலும் தனித்துக் காணுங்கால் தலைவன் இளந்தோழியுடன் நட்புக் கொண்டு பழந் தலைவியைப் பகைத்துக் கொண்டான் என்ற நிகழ்ச்சிக்கு இங்கு இடம் இல்லை. 3. இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் நடைபெறும் பாங்கற் கூட்டத்தில் பாங்கன் தலைமகளைத் தனித்துக் காணுங்கால் இருவரும் மாறிப்புக்கார் என்ற வரம்பிகந்த செயல் இங்கு நடை பெறுவதில்லை. - . t 4. தலைவனது தோழனுக்கும் தலைவியின் தோழிக்கும் உறவு கற்பித்து முதல் கதையில் கிளைக்கதையைத் தோற்றுவிக்கும் மரபினை இங்குக் காண முடியாது. 5. தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி என்ற நால்வர் தம் முள் ஐயமும் பூசலும், பொறாமையும் சூழ்ச்சியும் தோன்றச் செய்து ஐந்திணைத் துறைகளை அகலக் கதையாக்கும் செயலுக்கு இங்கு இடம் இல்லை. | 13-ى