பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| அகத்திணைக் கொள்கைகள் ல் இரவுக்குறிகளில் காதலர்கள் சந்திப்பதைக் கூர்ந்துக் கவனித்து வரும் கிழ்மகன் ஒருவன் வழியிடைத் தலைவனைத் தாக்கித் தலைவியைக் கைப்பற்றினான் என்பதற்கும், தாக்குண்ட தலைவன் கீழ்மகனை எதிர்த்தாக்குதலால் கொன்று தலைவியைக் காப்பாற்றினான் என்பதற்கும் இங்கு மரபு இல்லை. 7. கனவுக் காதலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகட்கிடையே இறந் தார்கள் என்றோ, ஒருவர் இறந்தபின் மற்றவர் புலம்பி அழுதார் என்றோ கூறும் மரபினை இங்குக் காண இயலாது. 8. இரவுக் குறிகளில் தலைவன் நள்ளிரவில் தனிமையாக வந்து போகுங்கால் கொடிய விலங்குகள் அவனைத் தாக்கின றோ, ஆறலைக் கள்வர்களால் அலைத்துத் தாக்கப் பெற்றான் என்றோ கூறும் நிகழ்ச்சிகள் இங்கு இடம் பெறுவ இல்லை. 9. அவருக்கும் பெற்றோர்க்கும் இற்செறிப்புக்கும் அஞ்சிா தலைவி தலைவனுடன் உடன்போக்கில் நெடுவழி ஏகுங்கால், நடு பில் ஒருவர் மரித்தார், மற்றவர் கதறி யழுதார் என்பன போன்ற திகழ்ச்சிக்கு இங்கு இடம்இல்லை. அங்ஙனமே, தலைவியின் அண்ணன்மார்களால் தாக்கப்பெற்றனர் என்று கூறும்மரபும் இல்லை. களவுக் காதலர்கள் கற்புப்படும்வரை அவர்கட்கு இறப்பு தேசிடாது என்று தம்பினவர்களும் அல்லர் தமிழர்கள். இத்தகைய திகழ்ச்சிகளைப் புறத்திணையில் அடக்குவர் அவர்கள். o ஆ 10. தம் மகள் வரிக்கும் காதலனைப் பெற்றோர்கள் ஒப்புக் கோள்ளாமல் வேறொருவனைக் கணவனாக்க அவர்கள் முயன்று திருமண ஏற்பாடு செய்யுங்கால் மனம் உடைந்த நங்கை தற்கொலை புரிந்து கொண்டாள் என்று நொதுமலர் வரைவுத் துறையைச் திசை மாறச் செய்யும் மரபு என்னானும் ஈங்கில்லை.