பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முை றகள் - 207 இது தோழி தான் அறத்தொடு நின்றமையைக் கிழத்திக்கு உரைப் பதாக அமைந்த பாடலாகும். பெற்றோர்க்குக் களவை வெளிப் படுத்திய செய்தியைக் கூறுவதால் இது களவை வெளிப்படுத்தி முடித்துக் கொண்ட திருமணம்ாகும். களவொழுக்கத்தை "ஒளித்த செய்தி என்றும், தலைவன் கேட்க வரைவுக்குப் பெற்றோர் உடன்பட்டதை நன்றுபுரி கொள்கை' என்றும் பாடல் குறிப்பிடு வதைக் காண்க. இதனால் நேர்வழி யல்லது குறிப்புவழி பயன் படாது என்று கருதிக் காதற் கன்னியர் துணிவினை மேற்கொண்டு தம் களவினை வெளிப்படையாகப் பெற்றோர்க்கு அறிவிப்பர் என்று இதனால் அறியப்படும். அறிவுடைப் பெற்றோரும் கற்புக்கு ஆவனவே செய்வர் என்பதும் தெரிகின்றது. கற்புக்குப் பின்னிடல் யாண்டும் தமிழ் ஒழுக்கம் அன்று. "உடன்போக்கின் இறுதியில் தலைவியின் சுற்றத்தார் தலைவி யின் “கற்பொடுபுணர்ந்த கெளவை'யை நேரில் அறிந்ததும், உடன் போக்கிற்கு ஒருப்பட்டுத் தம்மூர் மீள்வர் என்று குறிப் பிட்டோமன்றோ? தலைவன் தலைவியைத் தன்னுரர்க் கொண்டு சேர்ப்பன். சில நாட்களுக்குப் பின்னர்த் தலைவியின் தமர் தலைவியின் இருப்பை அறிந்து தலைவனை நெருங்கி அவனைத் தம் மூரகத்தே வந்து மணம் புரிந்து கொள்ளும்படி வேண்டுவர். அவ்வேண்டுகோட்குத் தலைவன் உடன்பட்டால் அவன் தலைவி யின் ஊரையடைந்து அவ்ளை வதுவை புரிந்து வாழ்வு பெறுவன இனி, உடன் போக்கில் தலைவியின் தமர் இடைச்சுரத்தில் தடை. புரியாமலும், அவர் தலைவியின் இருப்பை யறிந்து வந்து தலைவனை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டாமலும் போவாராயின், தலைவன் அவளைத் தன் மனையில் வைத்து வதுவை மணம் புரிந்து கொள்வான். இம்மண நிகழ்ச்சிக்கு முன்னர் தலைவனுடைய தாய் அவனால் கொண்டுவரப்பெற்ற தலைமகள் பொருட்டுச் சிலம்புகழி நோன்பு என்பதொன்று செய்தல் பண்டைய மரபாக இருந்தது. மணம் புரிவதற்கு முன்னர் மணமகளது காலில் அவள்தம் பெற்றோர்கள் அணிந் திருந்த சிலம்பை நீக்குவதற்குச் செய்யப்பெறும் சடங்கே 'சிலம்புகழி நோன்பு என்பது இதனை, நும்மனைச் சிலம்பு கழிஇய அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல்