பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-16 கரணம்பற்றிய குறிப்புகள் கரணத்தின் இன்றியமையாமை முன்னர் குறிப்பிடப்பெற்றது. அத்தகைய கரணத்தைப்பற்றிய சில குறிப்புகளை ஈண்டுக் காண்போம். தமிழ்ச் சமுதாய வழக்கையும் இலக்கிய வழக்கையும் நோக்கின் கரணத்திற்கு உரியாள் பெண் என்றே பெறப்படும், கற்பு இருபாலார்க்கும் பொது என்பது உண்மையே. எனினும், வழிவழியாக நடைமுறையில் இருந்து வரும் சில செயல் முறைகளை ஒருவாறு ஒப்புக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் குடும்ப இயலைப் போற்றியது. போற்றும் பொறுப்பைச் செறிவும் நிறையும் மிக்க பெண்ணினத்திற்கு அளித்தது. பல தார மணம் ஆடவர்க்கு வழக்காறாக இருந்து வந்தமையால் புற அடையாளம் ஆடவர்க்குத் தேவை இல்லை என்று கருதியது போலும்! சிலப்பதிகார ஆசிரியர் கண்ணகியின் கற்பின் மாட்சியினை, தீதிலா வடமீனின் திறம் இவள்திறம்" என்று பாராட்டினரேயன்றி கோவலனை அங்ங்ணம் பாராட்ட வில்லை. - மண்தேய்த்த புகழினன் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினர் ஆயத் துப் பாராட்டிக் கண்டேத்தும் செவ்வுேளென் றிசைபோக்கிக் காதலாற் கொண்டேத்தும் கிழமையான் கோவலன்' என்றுதான் அவனைப் பாராட்டினார். ஒருவன் மணமாகாப் பெண்டிர் பலரைக்காதலிக்கலாம்; ஒருவனை மணமாகாப்பெண்டிர் பலரும் காதலிக்கலாம். இவை சமுதாய நெறி என்று கொள்ள வேண்டா. நடைமுறைக்கு இணங்கி ஒருவன்-பலர் என்ற கொள்கை இலக்கியத்திலும் இடம்பெற்றது. ஆயினும், ஒருவன்-ஒருத்தி என்ற கொள்கையே அதன் குறிக்கோளாகும். 1. சிலப். மங்கல வாழ்த்து-அடி. 27 2. டிெ-அடி 36-39.