பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22(? அகத்திணைக் கொள்கைகள் சிலம்பு கழிஇய செல்வம் பிறருணக் கழிந்தவென் னாயிழை யடியே." என்ற நற்றிணைப் பகுதியால் சிலம்பு கழித்தல் ஒரு செல்வம் என்றும் அதனைக் காணும் பேற்றை ஈன்ற தாய்க்கு அளிக்காது பிறர்க்கு அளிக்கப் போயினாளே தன் மகள் என்றும் ஒரு தாய் வருத்துவதை அறியலாம். கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போன சாலை யான." என்னும் தொல்காப்பிய விதி நடைமுறையில் இருந்ததையும், அவ்வழக்கின் உட்பொருளையும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் விளக்குகின்றன. எனினும், சிலம்பு அணி நோன்பு என்ற ஒருவிழா மரபுஇருந்த தற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. அஃது இயல்பான வழக்காக இருந்தது போலும் என ஊகிக்கலாம். இந்தக் குழந்தை யணி திருமணத்திற்குச் சிறிது முன்னர்த்தான் நீக்கப்படும் என்பது அரியத் தக்கது. நம்மனைச் சிலம்பு கழிஇ யயரினும் எம்மனை வதுவை நன்மனம் கழிக." என்ற ஐங்குறுநூற்றுச் செய்யுட் பகுதி ஒரு நற்றாயின் வேட் கையை உணர்த்துகின்றது. சிலம்பு கழிஇயும் (சிலம்பு கழிஇ நோன்பும்) வதுவை மணமும் தலைவியின் பிறந்தகத்தில் நிகழ்த்துதல் சிறப்பாகும். உடன் போக்கு நிகழின் இச் சடங்குகள் தலைவன் மனைக்கண் நிகழ்த்துவர். இங்கு நற்றாய் சிலம்பு கழிஇ’ தலைவன் இல்லத்தில் நிகழந்தாலும், வதுவை மண மாவது" தன் இல்லத்தில் நிகழ வேண்டும் என்று விரும்பு கின்றாள். இக்காலத்தே கருமணி அணிதல் சடங்கு நாத்துரணங் கையரால் நிகழ்த்தப்பெறுதல் மரபாதல் போலவே சிலம்பு கழித்தல் என்னும் சடங்கு அக் காலத்தில் இவர்களால் நிகழ்த்தப் 18. தற்-279. j9. கற்பு-21 : ஆகுறு-ஜ. 21. இச் சடங்கிற்குத் தலைமகள் உண்ணா நோன்பிருத்தல் மரபு ஆதலின் இது சிலம்பு கழிஇ நோன்பு, எனப் .ilٹی-ساس ال} தலைவியின் இரு முதுகுரவரும் நீர் வார்த்துத் தம் மகளைத் தலைமகன் கையில் ஒம்படை செய்யும் சடங் காகும்.