பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

அகத்திணைக் கொள்கைகள்



ஒக்கின்றதே! அதற்குக் கரணம் யாதோ?' என்று கேட்பான், இவ்வாறு புனைந்துரைத்தல் இல்வாழ்க்கையில் நிகழும் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

     வேம்பின் பைங்காய்என்  தோழி  தரினே
     தேம்பூங் கட்டி என்றனிர். 11 

'இஃது ஊடியிருந்த தலைவியின் உடன்பாடு பெறுவதற்குத் துணை புரியும் வண்ணம் தலைவன் தோழியை வேண்டிய பொழுது அவள் கூறியது. இங்ஙனமே தலைவியு ம் தலைவனும் இல்லறம் நடத்தும் திறத்தை அவர் மனைக்குச் சென்று வந்த செவிலி தன்றாய்க்குக் கூறுகின்றாள்,

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்புகை கமழத்
தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்"
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணு தல் முகனே 1:

[முளிதயிர் - முற்றிய தயிர்; கழுவுறு கலிங்கம் - துடைத்துக் கொண்ட ஆடை; குய்கை - தாளிப்பின் புகை; கமழ - 1. மணக்க; துழந்து - துழாவி; அட்ட - சமைத்த; தீம்புளிப் பாக!” - இனிய புளிப்பையுடைய குழம்பு; ஒள்நுதல் -தலைவி.]

தலைவி சமைத்த புளிக்குழம்பைத் தலைவன் இனிதென்று கூறி உண்கின்றான். தலைவி அகம் மகிழ்கின்றாள். இந்த மகிழ்ச்சியை அவள் முகம் காட்டுகின்றது . இயல்பாகவே பொலிவு பெற்ற நுதல் மகிழ்ச்சியால் பின்னும் பொலிவு பெறுகின்றது . அம்மகிழ்ச்சியை மிகுதியாக வெளிப்படுத்தாமல் 'நுண்ணிதின்' மகிழ்கின்றாள்.

நான்கு:

'அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கம் காட்டிய குறிப்பு11. ஷை -196 12. ஷை. 167