பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவு வகைகள் 253


 'பின்பனி தானும் உரித்தென மொழிப."
     

என்று மேலும் பாலைக்கு ஒரு பெரும் பொழுது வகுத்தனர் ஆசிரியர். கலத்திற் பிரிவு கருதியே பனிப் பொழுது பாலைக்கு வகுக்கப்பட்டது என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. எனினும் கலத்துப் பிரிவுப் பாடல்கள் தோன்ற வில்லை. தலைமேல் வெம்மை, காற்கீழ் வெம்மை, நெஞ்சத்துள் வெம்மை இந் நிலையில் பாலைச் செலவினர் பெரும் பாழான தோற்றத்தைக் காண்கின்றனர் என்பதாக விளக்கஞ் செய்வர் தனிநாயக அடிகள். வெம்மை வளம் மிக்க சுரமும், அச்சுரத்துக் கோடைக் காலமும், அக்கால நண்பகலும் பிரிந்த காதலர்களின் காதற் சுரத்தையும் கவலைக் கொதிப்பையும் பெருக்க வல்லவை. நிலக் கொதிப்பும் காலக் கொதிப்பும் உள்ளக் கொதிப்பைத் தெளிவாகக் காட்டுபவையாகும். இதுகாரணமாகத்தான் சங்கச் சான்றோர்கள் நிலவழிப் பிரிவுகளையே பாலைத் திணையாக மிகுத்துப் பாடினர் போலும்! கடல்வழிப் பிரிவாயின், நில வெம்மையும் கால வெம்மையுமாகிய புறக் கொடுமையைப் புனைதற்கு இடம் இல்லையன்றோ?

 ஒதற் பிரிவு:  கல்வியின் பொருட்டுத் தலைவன் பிரிவான் என்பதனால், தலைவன் இதுகாறும் கல்வி பெற்றிலன் எனக் கருதுதல் வேண்டா. இதற்குமுன்பே அவன் நல்லாசிரியனை அடைந்து அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கு குறிக்கோள் பொருள்களை உணர்த்தும் நூல்களையெல்லாம் முறைப்படி கற்றுத் துறைபோகிய வித்தகனாவான். எவ்வளவுதான் கற்கினும் கல்வி கரையில அல்லவா? 'கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பது ஆன்றோர் கூற்றன்றோ? இன்றுகூடப் பட்டங்களைப் பெற்று ஆராய்ச்சித் திறன்மிக்க அறிஞர்கள் வெளிநாடு சென்று, பல அறிவியல் துறைகளிலும் பொறிநுட்பத் துறை களிலும் தொழில் நுணுக்கத் துறைகளிலும் மேலும் கற்று வருவதைக் காண்கின்றோ மன்றோ? ஒதற்பிரிவு என்பதற்கு இளம்பூரணர் தமது நாட்டகத்து வழங்காது பிற நாட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல்" என்று கூறியிருத்தல் இன்று வெளி நாடுகளுக்குச் சென்று கல்வி பெறும் வழக்கத்தை

7. டிெ-12 8. Nature in Ancient Tamil Poetry p-, 147