பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 அகத்திணைக் கொள்கைகள் தீதில் நெஞ்சத்துள் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே' என்று ஒழுக்க வஞ்சினம் கூறிய சோழன் நலங்கிள்ளியும் சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக' என்று தன் ஒருமைக் காதலைச் சூளுரைத்த பூதப் பாண்டியனும் இதற்குச் சான்றுக ளாவர். இத்தகைய ஒருமைக் கணவன் மார்க்கும் பரத்தைக் கணவன் மார்க்கும் வேறுபாடு காட்டாமல் இரு சாராரையும் ஐந்திணைத் தலைவர்களாகக் கொண்டது ஒரு குறையெனக் கருதுவர் டாக்டர் வ. சுப. மாணிக்கனார்." ஐந்திணைக் காதல் வாழ்வில் ஆடவனது பரத்தமைக்ெ இடம் அளிக்காது அவனைத் தூய்மைப் படுத்தியவர் திருவள்ளுவர் பெருமான். எனினும் பரத்தமைக் குறிப்பை அவர் அறவே ஒதுக்கவில்லை. தன் கணவன் தவறிலன் என்பதை அறிந்தும், ஊடற் காலத்துத் தவறுடையான்போலச் சுட்டிக் காட்டிப் புலவி மிகுவிப்பாள். வள்ளுவர் படைத்த தலைவி. ஆகவே, வள்ளுவர் புனைந்த பரத்தைக் கற்பிதம் ஐந்திணைப் பாற்படும். ஆனால் சங்கச் சான்றோர் பாடியுள்ள மெய்யான பரத்தைச் செயல் ஐந்திணையில் அடங்காது என்பது டாக்டர் மாணிக்கனார் கருத்து. ஏறிய மடற்றிறம் பெருந்திணையாவதுபோல் கழிகாமம் மிக்க ஆடவனது பரத்தமை பெருந்திணை யாதலே பொருந்தும் என்பது அவர்தம் அதிராத் துணிபு. ஒரு நிலைக் காமம் நுகரும் ஆண்டகையே ஐந்திணைத் தலைவன் ஆதற்கு உரியவனாவான். இத்தகைய தலைவன் ஒருவனையும் சங்க இலக்கியத்தினின்றும் காட்டுவர் அவ்வறிஞர். பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை யூரன் மகளிவள் பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியதுே.' (பகன்றை-ஒருவித கொடி, வான் மலர்-தூய மலர்; கோடு கொம்பு கருந்தாள்-கரிய கால்: பூ-தாமரைப் பூ.1 12. புறம்-71 13. புறம்-71 14. தமிழ்க் காதல்-பக், 293 15. ஐங்குறு. 97.