பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Vi. கைக்கிளை இப்பகுதி வா தத்திற்கு இடனாக அமைகின்றது. இத்திணை விரிவற்றது. இத்திணைபற்றித்தொல் காப்பியம் கூறும், காமம் ,சாலா இளமையோள் என்ற தொடரின் உண்மையான பொருளே இதன் உயிர்நாடியாகும். இந்தத் திணையைக் கலித்தொகையில் நான்கு பாடல்கள் சித்திரிக்காட்டுகின்றன. கைக்கிளை என்னும் குறியீடு இருபாலார்க்கும் கொள்ளத்தக்க பொது நிலையில்தான் அமைந்துள்ளது என்பது தெளிவு. கைக்கிளை என்பது ஒரு நிலையே. இளம் பெண்களைக் காணுங்கால் இயல்பாகத் தோன் றும் உள்ளத்தளவில் நிகழும் ஒருவித கிளர்ச்சி யாகும் இது. இதனைக் காமம் விளைவித்த பெண்ணும் அறியாள் புறத்தார்க்கும் இது புலனாகாதது. இஃது இளைய ஆடவன் அகத்தில் பிறந்து நின்று மறைவது. இக்காதல் உணர்வு நிலைத்து நின்றது. சிறுபொழுதா யினும் தூய்மையானது; அன்புடையது; குற்றம் இல்லா தது. இன்ன தன்மையால் இஃது அகத்திணையாயிற்று: அகத்திணையில் ஒரு பிரிவாசவும், அதுவும் தொடக்கப் பகுதியாகவும் அமைந்து விட்டது. இத்தகைய கருத்துகள் இந்த இயலில் ஆராயப்பெறுகின்றன.