பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*$3. அகத்திணைக் கோள்கைகள் என்பர்நல்லந்துவனார் என்றசங்கப்புலவர். எனவே, காமஞ் சாலா இளமையோள் என்ற தொடரால் காமம் சாலுதற்கு, காமச் செவ்வி உண்டாதற்கு, உரிய பருவம் அண்மையில் வருவதற்கு உரியவள் என்பதுவே இதன் பொருள் என்பது துணியப்படும். எனவே, காமப்பதம் நெருங்குதற்குரிய பெண்ணைத்தான், இளை யவளைத்தான், காமஞ்சாலா இளமையோள் எனக் குறித்தார் தொல்காப்பியர் என்பது பெறப்படும். - பருவம் எய்திய நங்கையர் யாவரும் காதலித்தற்கும் மணங் காணுதற்கும் உரியவர்கள். அணிமையில் வயதுக்கு வந்த நங்கைக்கும் மெய் வேறுபாடு பெரிதும் இராது. கரணத்தினால் மேற்கொண்ட புற அடையாளம் இல்லாததாலும், மேனி வளத் திலும் குறிப்பிடத் தக்க வேறுபாடு இல்லாததாலும் இத்தகைய பக்குவம் எய்தாத நங்கையொருத்திபால் நம்பி ஒருவ்ன் காதல் கொள்ளும் காட்சியைக் கலித்தொகை நன்கு சித்திரித்துக் காட்டு கின்றது. அவன் அவளைப் பாராட்டி வியத்தலை, வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்தோள் பேரெழில் மலருண்கண் . பிணையெழில் மானோக்கின் காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதல் கூரெயிற்று முகைவெண்பல் கொடியுரை நுசுப்பினாய்." (ஐம்பால் - கூந்தல்; கார் - மேகம்; கவின் - அழகு; சுடர் - ஒளி: எயிறு - இடை) என்ற பாடற் பகுதியில் காண்க. இதில் கோதி தெளிந்த அவளது கூந்தலையும், பருத்த மெல்லிய தோளினையும், மலர்போலும் குளிர்ந்த மையுண்ட கண்களையும், மான்போலும் மருண்ட பார் வையினையும் மழைபெற்ற தளிர்போலும் மேனியினையும், ஒளி பொருந்திய நெற்றியினையும், முகை போன்ற கூரிய வெள்ளிய பல்லொழுங்கினையும், கொடி போன்ற துவளும் இடையினையும் பாராட்டி வியத்தலைக் காணலாம். இன்னொரு தலைவன் 4. கவி o 58