பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைக்கிளை 273 பிறிதொருநங்கையிடம் சூட்டு மயிரினையுடைய அன்னம் போன்ற நடையினையும் அழகிய மயில் போன்ற சாயலையும் அழகிய புறா வின் மடப்பத்தையும் பெற்றுள்ள நின் எழில் நலத்தைக் கண்டார் நின்பால் காம மயக்கம் கொள்ளாரோ? என்று தன் காமத் துயரை அறிவிக்கின்றான்." இங்ஙனம் பிதற்றும் அவ்விளைஞர்களின் காதற் பதிவை அந்நங்கைமார் எதிரேற்கவில்லை; அவர்கள் பாராட் டையும் செவி மடுக்கவில்லை; துயரையும் உணரவில்லை. இங்ஙனம் தம்மால் இளைஞர்கள் அவதியுறுவதை அந்நங்கைமார் அறியார். இாரணம், அவர்கள் முன்னின்று அவ்விளைஞர்கள் அப்பெண்கள் கேட்கும்படியாகவும் உணரும்படியாகவும் நேர் நின்று யாதும் செய்வதில்லை. அவர்கள் தம் வாயளவில், தம் உள்ளத்தளவில், காதல் நிலைகளை ஆக்கிக் கொள்கின்றனரேயன்றி அப்பெண் மணிகளைத் தொடர்ந்து பாதும் செய்வதில்லை. காதலைப் புலனாக்கலாமா என்று அவன் உள்ளம் அவாவுகின்றது; அவ்வளவு தான, - இந்த இளைஞர்களைப்பற்றியும் இவர்தம் உள்ளோட்டம் பற்றியும் காமஞ்சாலா இளமை மகளிர் ஒன்றும் அறியார். அம் மகளிர் தம்பாட்டுக்குப்போவதும் வருவதுமாக உள்ளனர். ஆனால் இளைஞர்களோ தாமாக ஒன்றை நினைத்து அவாவிக் கவல் கின்றனர். இளைஞன் ஒருவன், நேர்சிலம்பு அரியார்ப்ப நிரைதொடிக்கை வீசினை ஆர்உயிர் வெளவிக்கொண்டு அறிந்து ஈயாது இறப்பாய்கேள்" (நேர் - காலுக்குப் பொருந்தின. அரி உள்ளிடு மணி; கொடி - வளையல்; இறத்தல் - கடத்தல்) என்று பேசுகின்றான். சிலம்பு ஒலிப்பக் கைவிசித் தன் உயிரைப் பறித்துக்கொண்டு அறியாது செல்கின்றதாக ஒரு பெண்ணை நோக்கிப் பேசுகின்றவன் தன் உயிரைத் தானே பறித்துக் கொண்டு புலம்புதலை இவ்வடிகளில் காணலாம். இந்நிலையிலுள்ள பிறிதோர் இளைஞன் தான் கூறியவற்றால் தான் கானும் நங்கை பால் யாதொரு சிறு மாற்றமும் தோன்றாததனால், 5. டிெ - 56 6. டிெ - 58 7. டிெ - 56 18-س-بى