பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 அகத்திணைக் கொள்கைகள் சான்ற குமரியானபின் ஐந்திணைக் காதலன் ஆதல் என்று முறையாக ஒதி கைக்கிளைக்கும் ஐந்திணைக்கும் ஒரு தொடர்பும் காட்டியிருப்பர். இலக்கணம் இலக்கியம் அறநூல் என்ற முத்துறை நூல்களையும் ஆராய்ந்து காணின் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவியிருந்த நல்லனவும் தீயனவுமான காதற் போக்குகளை தெளி வாக அறிந்து தெளியலாம். பேதைக் காதல் இம் மூன்றிலும் இடம் பெறாமையின் அது தமிழ்ச் சமுதாயத்தில் என்றும் இருந்ததில்லை என்று துணியப்படும். கைக்கிளைப் பாடல்களில் பெண்ணுறுப்பு களை வருணிக்கும் முறையை நோக்கினால், அவ்வருணனை குமரிப் பருவத்தை அணுகும் நிலையையுடைய பெதும்பைக்கு உரியது. என்பது தெளிவாகும். முற்றின கோங்க மாத்தினது இளைய முகையென்றும், தென்னைமரத்தின் கட்புலனான குரும்பைளன்றும், மழைபெய்யுங் கால் உண்டாகும் மொக்குள் என்றும் பெண்ணின் முலை வருணனையும்," மூங்கில் என்னும்படி திரண்ட தோளினையும் மணம் தாறும் கடை குழன்ற ஐம்பாவினையும், மானோக் கினையும் வென்ற மடப்ப நோக்கினையும், மயில் போன்ற சாயலையும், நுடக்கத்தால் கொடியெனவும், விளக்கத்தால் மின் எனவும், கட்புலனாகாமையின் வருத்த மெனவும், யாதொன்றும் தோன்றாத இடையினையும் உடைய பெண் வருணனையும்,' மேலும் அவள் உறுப்பும் வனப்பும் கண்டவர்தம் உயிரை வாங்க வல்லன எனவும்,' அவள் கண்ணோக்கு எல்லாருடைய உள்ளத்தையும் புண்ணாக்கும் எனவும் காட்டும் வருணனைகளும் அப்பெண் குமரிப் பருவத்தை அணுகும் நிலையையுடைய பெதும்பைப் பருவத்தாள் என்ற துணிவினுக்கே கொண்டு செலுத்து கின்றன. - பருவம் எய்தியவர்கட்கே திருமணம் கூட்டுவது என்பது தமிழ்ச் சமுதாய மரபாக இருந்து வந்ததையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. திருமணம் நடைபெற்ற அன்றே மணமக்கள் இன்பந் தலைப்பெய்வர் என்ற செய்தி தமர் நமக்கு ஈந்த தலை நாள் இரவில் கோடிக் கலிங்கம் உடுத்தவளைக் கூடிக் கலந்தேன்' என்று ஒரு மணமகன் நினைவு கொள்வதாலும்" கோடிக் கலிங்கத் 17. கலி-56. 18. டிெ-57. 19. டிெ-59 20. ഒി-136.