பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oğ0 அகத்திணைக் கொள்கைகள் பருவச் செவ்வியில்லாதவள். அதனால் அகத்தளவில் தோன்றிய தன் காதலரும்பைக் கிள்ளி எறிந்தான். இவனுடைய காதல் நிலைத்து நின்றது சிறு பொழுதாயினும், தூய்மையானது; அன்புடையது: மாசு தராதது. 'காமஞ் சாலா என்றதனால் தலைமைக்குக் குற்றம் வாராதாயிற்று' என்றார் இளம் பூரணரும். இன்ன தன்மைகளால் கைக்கிளை அகத்திணையா யிற்று. இவ்வகை உள்ளோட்டம் இளைஞர்கட்கு இயல்பாதலால் கைக்கிளை அகத்திணையின் ஒரு பிரிவாகவும் தொடக்கப் பகுதி யாகவும் அமைந்தது. தமிழ் இலக்கியத்தில் அகத்தும் புறத்தும் காணப்பெறும் பல்வேறு கைக்கிளைகளைத் தொல்காப்பிய உரைகளும் நம்பி யகப் பொருளும் புறப் பொருள் வெண்பா மாலையும் விரித்தோது கின்றன. அகத்திணைக் கைக்கிளைக்கும் ஏனைக் கைக்கிளை கட்கும் பெரியதொரு வேறுபாடு உண்டு. ஆண்டாற் கைக்கிளை பெண்பாற் கைச்கிளை என இருபாற் கூற்றுக்கும் ஏனைக் கைக் கிளையில் இடமுண்டு. தம் ஒருபுடைக் காமத்தை இருவரும் உரைப்பர். ஆயினும், இருவரும் ஒருவரை யொருவர் நேர்நின்று உணர்வைப் புலப்படுத்தலும் உரைத்தலும் இல்லை. கைக்கிளை என்னும் பெயருக் கேற்ப, எதிர்ப்பாலாரின்றித் தமக்குத் தாமே மொழிந்து கொள்வர். சொல்தெதிர் பெறாமை எல்லாக் கைக்கிளைக்கும் பொதுவான பண்பாகும். ஏனைக் கைக்கிளைக் காதலர்கள் காமஞ் சான்ற பருவ மக்கள்; காமத்தை உணரவும் நுகரவும் வல்லவர்கள். இவர்கள் விழைந்தாரைப் பெறுவது அரிது என்று முற்றிலும் அறிந்த பின்னரும் காதலை ஒழியார்; கவற்சியும் நீங்கார். . நக்கண்ணையார் ஆமூர் மல்லன்மீது கொண்ட காதல் கைக் கிளைக் காமமாய் முடிந்ததை நாம் அறிவோம். இக் கைக்கிளை பற்றிய பாடல்கள் புறத்திணையில் அடங்கின. பருவம். நிரம்பிய நக்கண்ணையார் ஒத்த பருவத்தனான மல்லனைக் காதலித்தாள். ஆனால், இருவருக்கும் பருவத் தகுதி யிருந்தும் உள்ளப் புணர்ச்சி இல்லை. அகத்திணைக் கைக்கிளை என்பது, அறியாமையால் ஒர் இளைஞனின் மனத்தில் சிறுபோது தோன்றி நீடியாது ஒழியும் காம மனநிலை. இங்கு ஆண், கைக்கிளைக்கு முதல்வனாயினும் ஆண்பாற் கைககிளை என்ற பெயர் பெறுதல் இல்லை. இவனது 22. புறம்-83, 84, 85,