பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 அகத்தினைக் கோள்கைகள் (3) இழிநிலைக் காமத்தைக் கூறும் திணையைப் பெருந் திணை' என்றது தாலிபெருகிற்று என்பது போல "மங்கல வழக் காக’க் கொள்வர் நாவலர் பாரதியார். சிறுதிணை என்று பெயரிட வேண்டிய ஒன்றைப் பெருந்திணை என்றது. அவையல் கிளவியாகும் என்றும் விளக்குவர் அவ்வறிஞர். ஆசிரியர் சிறுதிணை என்று குறியீடு செய்திருப்பினும் அஃது அவையல் கிளவி ஆகாது. கைக் கிளை என்னும் மற்றொரு குறியீட்டைப் பெருங்கிளை என்பது போல அமைத்திலர் என்பதை ஒப்பு நோக்கலால் இது பெறப்படும். இவ்விடத்தில் ஒன்று சிந்திக்கத்தக்கது. மக்களின் சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமும் உணர்ச்சியும் நோக்கி மங்கல வழக்கு ஏற்படும். குறியீடுகளோ அறிவுத் தெளிவுக்கு அறிஞரால் ஆக்கப் பெறுபவை. குறியீடுகளை மங்கலமாக்குவதால் எண்ணிய கருத்து மயக்கத்தை விளைவித்துவிடும். ஆகவே, குறியீடுகளை நேர் படவே துவல்வது நூலோர் போக்காகும். பெருந்திணையின் உட்பிரிவுகளாகிய தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்துமிடல் என்பவற்றை மங்கலமாக மொழியாதது ஒன்றே ஆசிரியரின் கருத்தைத் தெளிவாக்கும். உட்கூறுகளையே வெளிப் படையாகக் கூறியிருத்தலின் பெருந்திணை என்பது வெளிப்படை யான குறியீடே என்ப்து பெறப்படும். - - (4) பருவம் வந்த ஆடவரும் பெண்டிரும் ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் ஒருபுடைக் காமம் ஒருவகைக் கைக்கிளையின் பாற்படும். மகண்மறுத்தல்', மகட்பாற் காஞ்சி என்ற துறை களைப் புறத்திணையில் அடக்கினர் பண்டையோர். இந்நிலையில் வலிந்த பெருந்திணைக் காமம், பிறன்மனை தயக்கும் இராவண காமம், அகத்திணையில் அடங்காது என்பது வெள்ளிடைமலை. அங்ஙனமிருக்க, வழிவழிப் புலவர் உலகம் இதனையும் அகத் திணையில் வைத்து எண்ணியது மலையனைய பிழையாகும். இத்தகைய ஒரு பிழைமரபிற்கு அகத்திணையை ஐந்திணையாகக் கொண்டதும் கைக்கிளை, பெருந்திணைகள் அகமல்ல எனக் கருதியதுமே காரணங்களாகக் கொள்ளலாம். - (5) அறம் பொருள் இன்பங்களில் வழுவாத அகத்திணை நன்மக்கள் கொள்ளும் காதல் நிலை எனவும், கைக்கிளை பெருந் திணைகள் குற்றேவல் கொள்வார் காதல்நிலைகள் எனவும், கூறித் தவறான மரபி-ை ஏற்படுத்திவிட்டார் இளம்பூரணர். இது, 3. தொல். பொருள்-25 (இளம்) நாடி 54, 55, 77 நச்.காண்க.