பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 அகத்திணைக் கொள்கைகள் மடன்மா கூறும் இடறுமார் உண்டே' என்ற ஐந்திணைக் களவடியையும் நினைவூட்டுகின்றது. தலைவன் தலைவியர் தத்தம் காதற் பாங்குகளை உள்ளத் தளவிலும் சொல்லளவிலும் காத்தோம்பிக் கொள்ளுங்கால் அவை ஐந்திணைக் கோலங் கொள்ளுகின்றன; அவை அங்ஙனம் காத்தோம்பப்படாமல் சிலரிடம் மிகுநிலை எய்துங்கால் ஊரறியும் பெருந்திணைப் பொருளாக வடிவம் கொள்ளுகின்றன. ஐந்திணையை அளவுக் காதல் என்றும், பெருந்திணையை மிகுதிக் காதல் என்றும்சொல்லலாம்.'பெரும் என்ற அடையே இம்மிகுதிப் பாட்டைக் குறிக்கின்றது. பெரு மூச்சு, பெருங்காற்று. பெருமழை, பெரு மிதம், பெரும் பேச்சு, பெருங் காஞ்சி, பெரு வஞ்சி என்ற சொற் றொடர்கள் உடன் வைத்து நோக்கின் அளவிலும் மிகை என்ற போக்கினைத் தெளிவாக அறியலாம். (2). இனி, பெருந்திணைத் துறைகளின்பால் கருத்தினைச் செலுத்தி அவற்றின் ஐந்திணைத் துறைகளின் மிகு நிலையைக் காண்போம் - (அ) ஏறிய படற்றிறம்: இது தொல்காப்பியர் குறிப்பிடும் பெருந்திணையின் முதல் துறையாகும். ஐந்திணைக் களவில் தலைவன் தலைவியைத் தான் நினைத்தவாறு எல்லாம் கலந்து இன்புறத் துடிப்பான் என்பதையும், தோழி அவளது அத் துடிப்புக்கு இணங்காமல் பல் வேறு காரணங்களை கூறி வாயில் மறுத்துச் சேட்படுத்துவாள் என்பதையும் நாம் அறிவோம். இந் திலையில் அதனைப் பொறாத தலைவன் அப்படிச் செய்வேன்',' இப்படிச் செய்வேன்' என்று கூறி அச்சுறுத்துவான். இதனால் தலைவியைத் தன்னுடன் தோழி கூட்டுவிப்பாள் என்பது தலைவவனின் நம்பிக்கை குறுந்தொகைத் தலைவன் ஒருவன் தோழியிடம் மடலேறு வதைப் பற்றிக் கூறுவதை, மாவென மடலும் ஊர்ப; பூவெனக் குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப; மறுகின் ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே." (மா-குதிரை, குவிமுகிழ்-கூம்பியஅரும்பு; கண்ணி-தலையிர் சூடும்மாலை, மறுகு-தெரு, காழ்-வயிரம்) 6. களவியல் 11 7. குறுந்-17