பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேருந்திணை - 289 என்ற பாடலல் அறியலாம். இங்ஙனம் தலைவன் தோழியிடம் வாயளவில் கூறி நிறுத்திக் கொள்வது ஐந்திணை. இன்னொரு தலைவன் தன் நெஞ்சினை நோக்கி (தோழி கேட்குமாறு) இத் தோழியின் போக்கைப் பார்த்தால், மணியும் எலும்பும் அணிந்து ஒரு நாள் பனைமடற் கலிமா ஏற வேண்டி நேரிடுமோ? நாண் நீக்கிப் பிறர் எள்ளத் தெருவில் செல்ல வேண்டியதாய் விடுமோ?' என்றுகூறுகின்றான். இவன்மடலேற நானுகின்றான். இங்ஙனம் கூறி தானிய அளவில் நிற்பது ஐந்திணையாகும். இவ்விடத்தில் ஒன்றை நினைவிற் கொள்ளுதல் வேண்டும், ஒரு நங்கை தன்னை காதலிக்க வேண்டும் என்றோ, தான் அவளைத் தன் வசமாகக்க வேண்டும் என்றோ ஐந்திணை நம்பி மடலேறுவதாக மொழிவது இலக்கிய மரபு அன்று. தான் காதலித்த நங்கையை அடைதற்கு இடையூறாகத் தோழி இருக் கின்றாள் என்று கருதுங்கால் மட்டிலும் தலைவன் மடலேற்றம் பற்றி இசைப்பான். தோழியை வற்புறுத்துவதற்குத் தலைவன் மடல் கூறுவதன்றித் தலைவியை வற்புறுத்துவதற்கன்று. தலைவி தன்மேல் காதலுடையவள், காதலித்து நிற்பவள் என்ற அன்பின் அடிப்படையில்தான் மடற் கூற்று இலக்கியத்தில் பேசப்பெறும். பெருந்திணையிலும் ஒவ்வாத் தலைவியை உடன்படுத்துவதற் காகத் தலைவன் மடலேறும் மரபு இல்லை, அவன் மெய் யாகவே மடல் மா ஏறி ஊரறியத் தனக்கு உரிய ஒருத்தியையும் அவள்பாற் தான் கொண்ட காதலையும் அவளைப் பெற்று அணையாமையால் தான் படும் காதல் உணர்ச்சியினையும் வெளிப் படுத்துவான். இந்நிலையைக் கலிப்பா ஒன்றில் காணலாம். சான்றவிர்! வாழியோ சான்றவிர்! என்றும் பிறர்நோயும் தன்நோய்போற் போற்றி அறனறிதல் சான்றவர்க் கெல்லாம் கடனானால் இவ்விருந்த சான்றீர்! உமக்கொன் றறிவுறுப்பேன்." - (சான்றவிர்-நற்குணங்கள் எல்லாம் அமைந்தீர், அறன் அறிதல்-அறனை அறிந்து போதுதல்) இதில் தலைவன் சான்றோர்கள்முன் தன் நிலையை எடுத்துக் கூறு வதைக் காண்க. விரும்பாத நங்கையை நச்சி ஒருவன் மடலேறும் வழக்கம் இல்லை. இப்போக்கிற்குச் சமுதாயம் இடங் கொடுத் 8. ബി.-182 9. கலி-139. அ-19