பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 அகத்திணைக் கொள்கைகள் செல்வான். அங்ஙனமே வருவான்; வருவதற்கும் துடிப்பான். இன்பத்தைத் துய்க்காது இளமை கழிதலை அவன் விரும்பான். இளமையிற் சிறந்த வளமையும் இல்லை; இளமை கழிந்த பின்றை, வளமை காமத் தருதலும் இன்றே.' என்ற பாடலடிகளால் இவன் கருத்துத் தெளிவினைக் காணலாம். ஐந்திணைத் தலைவன் இதனை அறிந்து ஒழுகாது பொருளின் மீது பெருங் காதல் கொண்டு இளமை கழிய ஒழுகுவானாயின் அவன் பெருந்திணையாளன் ஆகின்றான். இளமைதீர் திறம்' என்ற தொடருக்குத் தன் இளமையும் தலைவியின் இளமையும் வறிதே தீரும்படி தலைவன் ஒழுகும் முறை என்பது பொருளாகும். எத்தகைய பிரிவுகளை மேற்கொண்டாலும் காலம் தாழ்த்தாது தலைவியுடன் இளமையில் காமம் நுகர வேண்டும் என்பது இதன் கருத்தாகும். * இவ்விடத்தில் கலித்தொகையில் கூனும் குறளும் முடமும் செய்த சில காதற்காட்சிகளை" உரையாசிரியர்கள்பெருந்திணைத் துறைக்கு எடுத்துக் காட்டுகளாகக் கொண்டதும், நாவலர் பாரதி யார் முடவனது காட்சியைக் காட்டியதும் தவறு என்று டாக்டர் வ. சுப. மாணிக்கனார் கொண்டமை ஏற்புடைத்தாகும். கூனி குறளன் குற்றேவலாளர் என்பதற்காக அவர்தம் காதலொழுக்கம் பெருந்திணையாகாது என்று அவர் காட்டிய நுட்பம் பாராட்டத் தக்கது. ஐந்திணை செல்வர்க்கே உரியது, ஏழையர்க்கு உரிய தன்று என்று உரையாசிரியர்கள் கொண்ட கொள்கை பெரும் பிழையாகும். எங்கு இருவர் மாட்டும் அன்புள்ளதோ அங்கு ஐந்திணை உண்டு என்பது அறியத் தக்கது." மேலும் அப்பேராசிரியர் குறுந்தொகை, நற்றிணை, அக நானூறு, ஐங்குறுநூறு என்ற தொகை நூல்களின் பாடல்களின் துறைகளின்மீது அகவிலக்கணத் தெளிவுடன் மறு பார்வை செலுத்தினால் சில பாடல்கட்குப் பெருந்திணைத் துறைகள் சொல்ல முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுவர். புதல்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின் நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய 25. டிெ-126 26. கலி-65, 94 27. தமிழ்க் காதல்-பக் 244-45