பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 அகத்திணைக் கொள்கைகள் போதவிழ் தாமரை யன்னநின் காதலம் புதல்வன் அழுமினி முலைக்கே’’ (புறவு-காடு; ஒள்துதல்-தலைவி, பசப்ப-பசலை பாய; போது அவிழ்-இதழ் விரியும்) 'நீ பிரிந்தால் குழவி பாலுக்கு அழும்' என்ற வாய் பாட்டால் 'நீ பிரிவையாயின் எம்பெருமாட்டி விடல் உறுதி; குழவியும் பாலின்றி இறக்கும்’ என்ற நிலையைப் புலப்படுத்துகின்றாள் (இப்பாடலின் வேறு நயங்களை எல்லாம் உரை நோக்கி அறிக). தாய்மை எய்திய தலைவியின் நிலையே இதுவாயின் மணந்தவுடன் தலைவியைப் பிரிதல் கொடிதினும் கொடிது அன்றோ? திருமணத்திற்குப்பின் வரும் பல கடமைகளை யும் மனைவியுடன் இல்லிருந்து ஆற்றுவதே நல்லறமாகும். இன்னொரு சமுதாய உண்மையையும் ஈண்டு நினையல்தகும். இளநங்கையின் பெருந்திணைக் காமத்தை, தேறுதற்கரிய மிகு காமத்தைக் குற்றமாகவும் பழியாகவும் சமுதாயம் கருதவில்லை. தலைவியின் காம வேட்கையை அரைகுறையாகத் தணித்துப் பிரியும் போக்கையே அது கடிந்தது. கலித்தொகைத் தலைவி பொருத்தியின் நிலையால் இது தெளியப்படும். தலைவியைப் | பிரிந்த தலைவன் எப்படியோ வீடு வந்து சேர்கின்றான். காதலி யின் நோவையும், அழுகையையும், பெரு மூச்சையும், இரவு பகல் உறங்கா நிலையையும் காணும் அவன் அவளை நெருங்கிப் புல்லி ஆரத் தழுவுகின்றான். தலைவியும் காமக் கலக்கம் நீங்கி அறிவு நலம்பெறுகின்றாள். காமக் கலக்கம் கொண்ட அவ்விள நங்கை தான் இழந்த நலத்தையும் புன்முறுவலையும் மீண்டும் எய்தப் பெறுகின்றாள்." அவளது துதற்பசலையும் மறைகின்றது; அறி விலார் கூறிய சில பழிகளெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லமெல்லப் போயொழிகின்றன.' - பாயல்கொண் டுள்ளா தவரை வரக்கண்டு மாயவன் மார்பில் திருப்போல் பவள்சேர ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்த தென் ஆயிழை புற்ற துயர்.” 34. ஐங்குறு-424. 35. கவி-142, - 4-144. 38. ബ്ലൂ.-145.