பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 அகத்திணைக் கொள்கைகள் என்று கூறுகின்றாள். இதில் ஒருகால் என் தலைவன் மரித்திருப் பானாயினும், நல்ல மனமுடையார் எண்ணியதை எண்ணியாங்கு துறக்கத்தில் எய்துவர் என்பது உண்மையானால், நானும் அவனை அடைந்தே திருவேன்' என்று தன் மனத் தூய்மையை நவிலு கின்றாள். இவற்றால் காமக் கலக்குண்ட அவள் கற்பில் சிறிதும் கலங்கவில்லை என்பது வெள்ளிடை மலை. தொல்காப்பியரின் கருத்துப்படி கற்பு போய் வரும் பொருளில்லை. நானோ ஒழுக்கத்தை விடாது அரிதிற் போய்வரும் தன்மையுடையது. உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று. என்பது தொல்காப்பியம். ஆதலின் நம்பியின் வரவால்.நங்கையின் துயர் பறந்தோடுகின்றது. சென்றதுபோல் தோன்றிய நாணமும் திரும்ப வந்தடைகின்றது. நம்பியை வணங்குகின்றாள். பழைய பண்புகள் யாவும் நங்கையை வந்தடைகின்றன. காதலன் மன்ற அவனை வரக்கண்டாங்கு ஆழ்துயர மெல்லாம் மறந்தனள் பேதை நகையொழிந்து நானுமெய் நிற்ப இறைஞ்சித் தகையாகத் தையலாள் சேர்ந்தாள் நகையாக நல்லெழில் மார்பன் அகத்து." (பேதை - நங்கை இறைஞ்சி - வணங்கி; தகை - அழகு; தையலாள்-பெண் எழில்-அழகு.) என்று பெண பாற் பெருந்தினையை ஐந்திணையாக முடித்துக் காட்டுவர் நல்லந்துவனார். நகையொழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி' என்று ஐந்திணைப் பண்புகளை மீண்டும் பொருத்திக் காட்டிப் பெண்ணின் பெருமையை நிறுவுவதைப் பாடலில் காண்க அந்துவனாரின் பெருந்திணைப் பாக்களின் இறுதியடிகளைச் சிந்தித்து நோக்கினால் அவை புணர்ச்சியுடன் முடிந்து ஐந்திணை யாதலைக் காணலாம். பெருந்திணைப் பாடல்களின் முடிவு இப்படித்தான் அமைதல் வேண்டும் என்பதை அந்துவனாரின் பாடல்கள் தெரிவிக்கின்றன. 3 மேற்காட்டிய பாடலின் தலைவி நாண் விட்டமையாலும் அவளது காமத்து மிகுதிற்த்தாலும் அவள் ஒழுக்கம் பெருந்திணை 41. களவியல்-23 42. கவி.147, 43. டிெ. 142-147.