பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்திணை 307 ஒழிந்து அன்னையின் காவலையும் பெரிய தலைக்கடை வாயிலையும் கடந்துப் பலரும் காணப் பகற்காலத்திலேயே புறப் படுவோம். பலரும் அறியும்படி அவன் ஊர் யாது என்று வாய் விட்டுக் கூவுவோம். வரையாது ஒழுகும் நீயும் ஒரு சான்றோனா என்று அவனுார் சென்று கேட்டு விட்டுத் திரும்புவோம்' எனத் தோழி அழுத்தமாகக் கழறி உரைக்கின்றாள். குறுந்தொகையில் ஒரு கற்புத்திணை நிகழ்ச்சி. பொருள் ஈட்டும் காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவன் நீண்ட நாட்களாகத் திரும்பி வந்திலன்: தலைவிக்கு ஏக்கம் மிகுந்து உடல் மெலிந்து வளைகளும் கழன்று போகின்றன: உறக்கமும் இல்லை. இல்லத்து இருப்புக் கொள்ளவும் இல்லை. தலைவன் சென்ற இடம் நெடுந்தொலைவிலிருப்பினும் , தமிழ் நடையாடாத நாடாக இருப்பினும்,அவன் இருக்கும் இடத்திற்குப் போக நினைக்சின்றாள். உய்குவம் ஆங்கே, எழு இனி வாழி என் நெஞ்சே!” என்று நெஞ்சிற்குச் சுட்டுகின்றாள். இதிலும் நாண எல்லை கடக்கத் துணிகின்றாள்; ஆனால் அங்ங்ணம் கடக்க வில்லை. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் நாளைக் கடக்கும் நினைப்பும் கூற்றும் இருப்பினும், நாண் வரம்பு இகவானவாதால் அவை ஐந்திணையுள் அடங்குகின்றன. மிக்க காமமாயினும் தக்க எல்லைக்குள் அடங்கி நிற்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை ஐங்குறு நூற்றிலும் அகப்பாட்டிலும்" காணலாம். இனி மிக்க காமத்து மிடலுக்கு ஒர் எடுத்துக்காட்டு தரு வோம். ஆதிமந்தியார் கூறும் நிகழ்ச்சியொன்றில் இதனைக் காணலாம். மன்னர் குழிஇய விழவி னானும் மகளிர் தழிஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்டக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீர் இளங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே." 50. நற். 365. 51. ஐங்குறு. 114, 237 52. அகம் - 309 53. குறுந் 31