பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் 315 இடைச்சியர், உழவர் உழத்தியர், அளவர் அளத்தியர் என்ற நானிலத்தைச் சார்ந்த மக்கள் எண்ணிறந்த அகப்பாடல்கட்குத் தலைமக்களாக அமைகின்றனர். ஆயநம்பி ஒருவன் மோர் விலையாட்டியுடன் காதல் பகர்வதையும்', அகநானூற்றுப் பாடல் களில் உப்பு விளையாட்டி களவுக் காதலியாக அமைவதையும்,' பல கலிப்பாடல்களில் குற்றேவல் புரியும் சிறுதொழில் மைந்தரும் மகளிரும் காதல் மாந்தர்களாக இலங்குவதையும் காண் கின்றோம். - அகத்திணை இன்பத்திற்குப் பொருள்வளம் அடிப்படையன்று என்பதையும், பாலின்பம் சிறப்பதற்கு ஒன்றிய மனவளமே அடிப் படையாகும் என்பதையும் அகப்பாடல்கள் உணர்த்துகின்றன. "ஒரான் வல்கிச் சீரில் வாழ்க்கை' என்ற குறுந்தொகைப் பாடலி லும், ஒரா யாத்த ஒரு நூண் முன்றில்' என்ற நெடுந் தொகைப் பாடலிலும் ஒரு பசுவை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் மக்கள் தலைமக்களாகத் திகழ்கின்றனர். செல்வச் செல்வி ஒருத்தி ஏழையாடவன் ஒருவனைக் காதலித்த பெற்றியை நற்றிணைப் பாடலொன்று’’ காட்டுகின்றது. தலைவன் ஒருவனது வறுமைப் போராட்டத்தைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் புனைந்து காட்டுவதை ஒர் அகப்பாடலில் காண்கின்றோம்.' ஒன்றன்கூறாடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை." என்பது ஏழைத்தலைவியின் துணியாகும். எனவே, அகத்திணை அமைப்பு தொழில், பொருள். பதவி முதலியவற்றின் அடிப்படை யில் அமையவில்லை என்று துணிய மேலை விளக்கங்கள் துணை புரிகின்றன. உள்ளங் கலந்த பாலிர்ரெல்லாம் அகத்திணைக்குச் சால உரிமையுடையவர்; உள்ளப் புணர்ச்சியே காதலுக்கு வேண்டும் இனிய அக வரம்பாகும். ಥಿಸ್ಟ್ರೇಣಿ அடிப்படை யாகக் கொண்டு அகத்திணை மாந்தர்களை நோக்குதல்வேண்டும். 7. கலி-108 8. அகம்-140, 390 - 9. கலி-62, 94, 110, 112 10. குறுந்-295 11. அகம்-369 12. நற்-110 13. அகம்-123 14. கலி-18