பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 - அகத்திணைக் கொள்கைகள் வினையே ஆடவர்க்கு உயிர்' . என்று குறிப்பிடுவர். மணம் நிகழாத களவொழுக்கத்தின்பொழுது தலைவியைக் கண்டுமகிழ மழைபொழியும் நடுநிசியில் ஏற்றிழிவு களும் இடுக்கு நெறிகளும் உடைய அரிய நெறிகளில் ஆங்குள்ள அரவு யானை புவி சிங்கம் யாளி முதலை போன்றவற்றிற்கு அஞ்சாது செல்வதை அகத்திணைப் பாடல்களில் காணலாம். அங்ஙனம் சென்றக்கால் தலைவியைக் காணப்பெறாது ஒழியினும் அவளைச் சிறிதும் வெறுக்காது அவள்தம் அருமைப்பாடுகளை நினையாது அவளுக்கும் தனக்கும் வருத்தம் விளைவிக்க எண்ணிய அக்களவொழுக்கத்தையேவெறுத்து உள்ளம் அமையப்பெறுவான். தலைவனுடைய பெருமையும் உரனும் சங்க நூல்களில் யாங்கனும் ஒளிரும். இரவுக்குறியை நாடிவரும் தலைவனைக் குறுந்தொகைப் புலவர், ஒலிவெள் அருவி ஒங்குமலை நாடன் சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொன்முரண் சோரும் துன்னரும் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம்' (வயப்புலி-வலியையுடைய புலி, முரண்-வலி; துன் அரும்மக்கள் அடைதற்கரிய, நடுநாள்-நள்ளிரவு; வருஉம்வருதலைச் செய்வான்) - என்று பாடலில் குறிப்பிடுதல் காண்க. பன்னாள் முயன்றும் தலைவியைக் காணப்பெற்ர்த அகநானூற்றுத் தலைவன், பெறலருங் குரையள் என்னாய் வைக லும் இன்னா அடுஞ்சுரம் நீந்தி நீயே என்னை இன்னற் படுத்தினை", |பெறல்-பெறுதற்கு அருங்குரையள்-அரியள் என்னாய் எண்ணாயாகி; நீந்தி-கடந்து; இன்னல்-துன்பம்) என்று தன் நெஞ்சினை நோக்கிக் கூறுவான். மற்றும் அல்ல குறிப்பட்ட தலைவன் ஒருவன் அந்த இடையூறுகளைக் கண்டு நெஞ்சழியாது, முயங்கல் இயையா தாயினும் என்றும் • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 22. குறுந் 135 23. டிெ. 88 24. அகம்-212 (அடி-10-13).