பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் - 321 கழியக் காதல ராயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்று அகநானூற்றுப் புலவர் குறிப்பிடுதலால் இது தெளியப் படும். அகப்பொருள் நூல்களில் தலைவன் பதினாராட்டைப் பிராயத்தானானாகக் கூறப்பெறுவன். இறையனார் களவிய லுரையாசிரியர் அறிவு, நிறை, ஒர்ப்பு. கடைப்பிடி என்பவற்றைத் தலைமகனது குணங்களாகக் கூறுவர். அறிவு என்பது, எப் பொருளாயினும் அப் பொருட்கண் நின்று அம் மெய்ம்மையை அறிவது. நிறை என்பது, காப்பன காத்துக் கடிவன கடிந் தொழுகும் ஒழுக்கம். ஒர்ப்பு என்பது, ஒருபொருளை ஆராய்ந்து உணர்தல் கடைப்பிடி என்பது. கொண்ட பொருள் மறவாமை’. இங்ங்ணம் பல்வேறு ஆண்களின் நல்ல கருத்துகளையுட்ைய உள்ளோட்டங்களை வெளிப்படுத்தும் குறிக்கோள் ஆடவனாக அகத்திணைப் புலவர்களால் படைக்கப் பெற்றவன் அகத்திணைத் தலைவன் என்பதனைத் தெளிவாக உணர்கி (ii) தலைமகள் அகத்திணை மாந்தர்களுள் குறையொன்றும் இல்லாத பெற்றியையுடையவள் இவளே. அக உலகில், குடும்பத்தில், தலைவியே இறைமை உடையவள் ஆட்சி புரியும் வேந்தும் ஆவாள். மனைவி இல்லாள்" என்னும் வீட்டுச் சொற்கள் இவளுக்கே உரியவை என்பதும், இவற்றிற்கு நிகரான ஆண்பாற் கிளவிகள் இல்லாமையும் எண்ணுதற்குரியவை. புறத்தொழுக்கம் கண்ட தலைவனை இல்லில் நுழையற்க என்று இடித்துத் திருத்தும் சொல்லுரிமையும் உடைய பெருமகள் இவள். இதனை “அஞ்ச வந்த உரிமை' என்று சிறப்பிப்பர் தொல்காப்பினர். வாயில் மறுத்தல், வாயில் நேர்தல் என்ற அகத்துறைகள் யாவும் கற்புடைய தலைவியின் உரிமையில் பிறந்தவிை. இவளுடைய 32. அகம்-112. . 33. இறை. கள. 2 இன் உரை, 34. கற்பியல் -5 (இளம்.) அ-21 . . . . *