பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324. அகத்திணைக் கொள்கைகள் கூட்டம்: பகன்றை - ஒரு வித பூ பாடு - கூறு, பங்கு; பிறந்த நற்கொண்டும் - பிறந்தது முதல்: புனைந்து எடுத்த - நலம் பாராட்டி வளர்த்த: அறனிலாளன் . இங்கு தலைவன்; இறந்தனள் - கடந்து சென்றாள்) இதில் செல்லமாக வளர்த்த தன்மகளைத் தலைவன் கூட்டிக் சென்று விட்டானே என்று தாய் வருந்துவதைக் காண்க. தலைவி குமரிப் பருவம் எய்தினவுடன் தோழியின் நட்பைப் பெறுவதை நாம் காண்கின்றோம். தலைவியும் வீட்டின் புறத்தே நடமாடுவதையும் அறிகின்றோம். பூப்பறிக்கவும் புனலாடவும் தோழியுடன் தலைவி அடிக்கடி வெளியே செல்லுகின்றாள். தாய் இங்ங்ணம் போதலால் ஏதம் விளையும் என எச்சரிக்கின்றாள்; அணங்கினால் தீண்டப்பெறுதல் கூடும் எனவும் குறிப்பிடு கின்றாள். வயது வந்தவள் இங்ஙனம் வெளிச்செல்லுதல் கூடாது எனவும் கூறுகின்றாள். - முலைமுகஞ் செய்தன முள்ளெயிறு இலங்கின தலைமுடி சான்ற தண் தழிை புடைய அலமரல் ஆயமொ டியாங்கனும் படாஅல் மூப்புடை முதுபதி தாக்கணங்கு உடைய காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை அல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்தென்' (முகம்செய்தல் - அரும்புதல், முள் எயிறு - விழுந்தெழுந்த கூரிய பற்கள் தலைமுடி - கூந்தல்; சான்ற அமைந்தன; அலமரல் - சுழன்று திரிதல்; படாஅல் - போகற்க: அணங்கு - தெய்வம்: காப்பு - காவல், பூண்டிசின் - எய்தினை பேதை 5-8 வயதுடையவள், பெதும்பை - 9-10 வயதுடையவள்) , - . - என்ற தாயின் கூற்றால் இதனை அறியலாம். - கவவு தெறியில் : இனி, களவு நெறியில் தலைமகளது குண நலன்களிைக் காண்போம். ஊழ் வலியால் கூடிய இயற்கைப் புணர்ச்சிக்குப் பிறகு தலைவி தலைவனையே நினைந்த வண்ணம் இருக்கின்றாள். தலைவனது பிரிவு நீட்டிப்பின் தன் உயிர். நீங்கும் என்கின்றாள் குறுந்தொகைத் தலைவியொருத்தி. 41. டிெ-7