பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் . 3.25 யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுணி பெருகிய நெஞ்சமோடு பெருநீர்க் கல்பொடு சிறுநுரை போல் மெல்ல மெல்ல இல்லா குதுமே”* (செறிதுனி - செறிந்த துயர்; பெரு நீர் - மிக்க வெள்ளம்; கல்பொரு - பாறையின்மீது மோதும்; - என்ற பாடற்பகுதியில் தலைவியின் உள்ளக் குறிப்பினை அறிய லாம். தலைவனுடன் அளவளாவாவிடினும் அவனைக் கானும் மாத்திரத்தில் தலைவிக்கு இன்பம் பிறக்கும். பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து கட்டுபு தக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே' (தேன் - தேனடை முடவன் - எழுந்து நிற்க முடியாதவன்; உள் கை - உள்ளங்கை; சிறுகுடை சிறிய குவிந்த பாத்திரம்; கோலி - குவித்து: சுட்டுபு - சுட்டி, நக்கியாங்கு உள்ளங்கையை நக்கி இன்புறுவதைப் போல்; பல்தால் - பலமுறை) * . . ." என்ற பாடற் பகுதியால் இதனை உணரலாம். தலைவனைப் பிரிதலால் தலைவியின் அழகைப் பசலைநோய் உண்னும் ೯TTL தாகப் பல பாடல்கள் அறிவிக்கின்றன. ஊருண் கேணி உண்டுறைத் தொக்க பாசி யற்றே பசலை; காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்த லானே' (உண்துறை உண்ணப்படும் நீரையுடைய இனற்றின் துறை; பாசி - நீர்ப் பாசி, தொடுவழி - முயங்குந்தோறும்: விடுவுழி - நீங்குந்தோறும், பரத்தல் - பரவுதல்) - கலித்தொகைத் தலைவியின் நிலை இது: 42. குறுந், 290 43. ഒു. - 60 டிெ - 399 44, &