பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

% அகத்திணைப் பாகுபாடு | என்ற இடங்களில் உரிய, பிரிவுப் பெயரால் விதந்து ஒதுவதைக் காண்டல் தகும். அகன் ஐந்திணை என்ற பொது அடையால் ஐந்தினை அகத்தினையுள் ஒருவகை என்பதும், அகக் கைக்கிளை அகப்பெருந்திணை எனப் பிறவகைகளும் உள என்பதும் கொள்ளக் கிடத்தல் நினைக்கத் தக்கது. அன்பின் அகத்தினை களவெனப் படுவது என்று கூறாமல் அன்பின் ஐந்திணை களவெனப்படுவது: என்று இறையனார் அகப்பொருளாசிரியரும், அவிஅகத் துறைகள் தாங்கி ஐந்தினை நெறியளாவி’ எனக் கம்பநாடரும் விழிப்புடன் ஆளும் சொல்லாட்சி நோக்கத் தகும். தொல்காப்பியருக்குப் பின் வந்த ஆசிரியர்கள் இந்நுட்பத்தை ஒராது அகத்தினை, ஐந்திணை களை ஒன்றெனக் கருதியும் கைக்கிளை பெருந்திணைகளை அகத்தின் வேறெனக் கருதியும் பிழைபட்டனர். திருக்கோவை யாரின் உரையாசிரியர் இவற்றை அகத்தைச் சார்ந்த புறம்' என்று குறித்திருப்பது இப்பிழையிடங்களுள் ஒன்றாகும். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப" என்ற தொல்லாசிரியர் கூறிய நெறியினை அறவே கெட்டொழித் தார் இந்த ஆசிரியர். ஐந்திணையை நோக்க இவ்விரண்டு திணை களும் சிறப்பில என்பது உண்மையேயாயினும், இவை எழுதிணை எனப்பட்ட அகத்தினையாதற்கு இழுக்கில்லை என்பது அறியத் தக்கது. ஒரு குடியில் பிறந்த பலருள் சிலர் சிறப்புற்றும் சிலர் சிறப்பின்றியும் இருப்பின் அன்னோர் ஒரு குடிபிறப்பிற்கு இழுக்கில்லையாதல் போன்றே, இவற்றையும் அகத்திணையில் அடக்குவது இழுக்கில்லை எனக் கொள்ளல் வேண்டும். கைக்கிளை பெருந்தினைகளின் சிறப்பின்மை எவ்வாறாயினும் அவற்றை அகத்திணையினின்றும் நீக்கமுடியாமைக்கும், ஐந்திணையோடு வைத்து எண்ணுவதற்கும் குருதியொப்பன்ன பண்பொப்பினை தமிழ்ச் சான்றோர் கண்டிருத்தல்வேண்டும். இவற்றை அகத் திணையில் சேர்த்துக் கொள்ளாவிடின் முழுவனப்புடைய அமைப்பில் ஒரு குறை தட்டுப்படும். எனவே, தொன்னெறி வழுவாத தமிழ் மரபினை அறிய விரும்புவோர் இதனைக் கருத் தினில் இருத்துதல் வேண்டும். - 9. கம்பரா. ஆரணி சூர்ப்ப-1 10. திருக்கோ. பாடல் 4 இன் உரை. 11. அகத்திணை-1 அ-2