பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 அகத்திணைக் கொள்கைகள் புதல்வற் கவைஇயினன் தந்தை மென்மொழிப் புதல்வன் முயோ விருவரும் கவையினள் இனிது மன்றஅவர் கிடக்கை நனியிரும் பரப்பினிவ் வுலகுடன் உறுமே (கவையினன்-அணைத்துக் கொண்டான் இருவரும்-இரு வரையும்) என்ற பாடலில் இதனைக் காணலாம். காதலர் தம் மகனுடன் கிடக்கும் இடம் சிறிதேயாயினும் அதனூடே உலகத்துயி ரனைத்தும்.அடங்கும் சிறப்புடையது. ஈண்டுஅன்புஎன்னும் கடவுட் பண்பு கால்கொண்டு மனைவி மகன் கணவன் என்னும் தொடர் புடையார்மாட்டு நன்கு படர்ந்து பின்னி அடங்கிக் கிடந்து, பின்னர் அது பின்னும் பரவிப் படருங்கால் தொடர்புடையார் மாட்டு மட்டுமன்றிப் பரந்துபட்டுச் சென்று அனைத்துயிரையும் தன்னகத்தே அடக்கிக் கொள்வதாகிய அருட்பண்பாக மலர்கின் றது. அருள் என்னும் அன்பீன் குழவி' என்ற வள்ளுவர் வாக்கும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. கலித்தொகைத் தலைவியொருத்தி தன் அருமந்த மைந்தனு டன் பொழுது போக்குகின்றாள். மாலை நேரத்தில் சிறுவன் சிறுதே உருட்டி விளையாடுகின்றான். அதுபோழ்து அவன் அணிந்துள்ள சதங்கைகள் ஒலியிடுகின்றன. அவள் அவனுக்கு அத்தா என்று தந்தையின் பெயரைச் சொல்லிக் கொடுத்ததைச் சிறுவன் மழலை மொழியால் கூறிச் செல்லும்போது அவள் பேரின்பத்தை அடை கின்றாள். அப்போது தோன்றின அம்புலியைத் தன் மைந்த னுடன் விளையாட வருமாறு அழைக்கின்றாள். இங்ஙனம் தன் மகனுடன் விளையாடலைக் காணும் தலைவியின் இன்பம் அளவி டற்கரிது.' இன்னொரு கலிப்பாடலால் தலைவி தன் மகனுக்குப் பாலூட்டுதலால் பெறும் இன்பத்தைச் சித்திரிக்கின்றது. சிறுவன் பாலுண்ண மறுக்கின்றான். தலைவி தந்தைக்காக ஒரு முடக்கு பருகுமாறு வேண்டுகின்றாள். அடுத்து, செவிலித்தாயர்க்கு ஒரு முடக்கு பருகுமாறு வேண்டுகின்றாள். இறுதியாக, தனக்காகவும் ஒரு முடக்கு என்று கொஞ்சி வேண்டுகின்றாள். இங்ங்ணம் சிறிது சிறிதாகக் கூறிட்டுப் பாலை ஊட்டிவிடுகின்றாள் தலைவி. சிறு வனின் பிடிவாதப் போக்கு சினத்தை எழுப்பக்கூடியதாயினும்

  • 7 5

75. ஐங்குறு-409 76. குறள்-757. 77. கலி-80