பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 அகத்திணைக் கொள்கைகள் யாணர் ஊரநின் மாண்இழை மகளிரை எம்மனத் தந்துநீ தழிஇயினும், அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிதே: அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம்பா டாதல் அதனினும் அரிதே." (யாணர்-புது வருவாய்; இழை-கலன்; உண்மை-மெய்ம்மை எம்பாடு ஆதல்-எம் பக்கத்து அமர்தல்) 'தலைவரே, பரத்தையரை நம் இல்லத்தில் கொணர்ந்து குல மகளிரைப்போல் மணம் புணர்ந்தாலும், அவர்களிடம் உண்மை அத்தி பூத்ததுபோல் தோன்றும். அவர்களும் மக்கட்பேறு அடைந்து என்நிலையை எய்துதல் அதனினும் அரிது’ என்றதில் தலைவியின் பெருமித உணர்ச்சி தெளியப்படும். சங்க இலக்கியங் களில் பரத்தையர் மகப்பேறு அடைந்த செய்தி யாண்டும் கூறப் பெறவில்லை என்பது ஈண்டு அறியத் தக்கது. குறுந்தொகைப் பரத்தை யொருத்தியின் வாக்கினால் தலைவன் தலைவிக்கு அடங்கியிருக்கும் செய்தி அறியப்பெறும். கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கது உம் ஊரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் துர்க்கத் துக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே .** (கழனி - வயல்; உகு - வீழ்கின்ற; பழனம் - பொய்கை; கது.உம் - கவ்வி உண்ணும்; ஊரன் - மருநிலத் 56೧೯೦೧6T; - ஆடி - கண்ணாடி பாவை - கண்ணாடியில் தோன்றும் உருவம்; புதல்வன்தாய் - மனைவி; மேவன - விரும்பியன) பரத்தையின் வாக்கினால் தலைவன் தலைவியின் மகப்பேற்றிற்குப் பிறகு அவளிடம் அதிக அன்புடையவனாதலையும், மனைவி என்ற நிலையில் காட்டும் அன்பைவிடப் புதல்வன் தாய் என்ற நிலையில் அதிகமான பரிவைக் காட்டுகின்றார் என்பதனையும் அறிகின்றோம். 81. நற்-330 . 82. குறுந்-8.