பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 341 கிழவோன் அறியா அறிவினள் இவள் என மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே." என விதி செய்வர் தொல்காப்பியர். தலைவியின் பிற்கால வாழ்க்கையில் மிகவும் கருத்துடைய இவளைத் தலைவி தன் போக்கிற்கு இடையூறாக இருப்பதாக எண்ணி மனம் வருந்துவாள். இதனால் தலைவிநற்றாய்க்கு வல்லுரைக்கடுஞ் சொல் அன்னை' பிணிகோளருஞ் சிறை அன்னை' 'அறனில் யாய்' என்றின்னவா றெல்லாம் பட்டம் அளிப்பதுண்டு. தலைவி தனக்குத் தக்க தலைவனைத் தானே தேர்ந்து கொள்வது இவளுக்கு உடன்பாடே யாயினும், இவர்கள் உடனே வரைந்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதே இவள் எண்ணமாகும். களவு நெறியில் செவிலிக்குரியனவாகக் கூறப்பெறும் பதின் மூன்று கிளவிகளும் நற்றாய் செவிலியுணர்வோடு உடம்ப்ட்ட உள்ளத்தளாயிருத்தலின், நற்றாய்க்கும் உரியவை என்று கூறுவர் தொல்காப்பியர். - - தாய்க்கும் வரையார் உணர்உடம் படினே." என் விதியால் இது பெறப்படுகின்றது. இவற்றைத் தவிர தலை மகள் உடன் போக்கில் சென்றபொழுது, தோழியுடனும் கண்டோர் மாட்டும் நற்றாய் புலம்பிக் கூறும் கிளவிகளாக, 'தன்னும் அவனும்' என்னும் நூற்பாவில் கூறியனவும் கொள்ளப்பெறும். தலைவியின் களவு வாழ்க்கையை இவள் நேரே வினவி அறியும் தன்மையள் அல்லள். ஒரோவழி ஐயுற்று அறிவள்: அல்லது செவிலியால் உணர்த்தப்பட்டு அறிவள். - களவியல் - 115 (இளம்) அகம் - 122 - ങു. - 122 . அகம் - 302, ஐங்குறு - 385. களவியல் -25 (இளம்) டிெ - 26 இளம்). அகத்திணை-39 (இனம்) .