பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அகத்திணைக் கொள்கைகள் சுருங்கக் கூறின், அகத்திணையின் உட்பிரிவான கைக்கிளை ஒரு குறுவடிவமாகும். தடுமாறு காட்சியால் ஆனிடை எழுந்த பாலுணர்ச்சியின் நிலையா மனப் பதத்தைப் புலப்படுத்துவது கைக்கிளையின் உட்கிடையாகும். இதில் ஒருத்தியைக் கண்ட ஆடவனுக்கும் அவனால் காணப்பெற்ற நங்கைக்கும் யாதொரு பழியும் இல்லை. மாசும் இல்லை. பெருந்தினையோ துரய காதலர்களிடையே அளவு கடந்து போகும் சில பால்வினைகளைப் புலப்படுத்துவதாகும். ஆகவே இந்த மனநிலைகளைப் புலப் படுத்துவனவே இத்திணையின் நான்கு துறைகளும்; இவை தனி நிலையுடையன அல்ல; சில ஐந்திணைத் துறைகளின் சார்புடை பெருந்தினை அகத்திணையின் முதிர்ந்து வீழ்கரு அகத்திணையின் இயல்பான வளர் பனவே. எனலாம். ஐந்திணையோ கருவாகும். காமக்கிளர்ச்சியை ஒருவகைக் கட்டுப்பாட்டுடன் உள்ளத்தோடு உடம்பிடை உணரவல்ல பருவம் வந்தெய்தின ஆடவர்-பெண்டிரின் தூய மனக் கூறுகளையும் பல்வேறு நிலை களில் புலப்படுத்துவதாகும். ஐவகை ஒழுக்கங்களாகப் பேசப் பெறும் இதன் பல்வேறு துறைகளும் எளிய மெல்லிய சால்பின வாகும்; இவை நெஞ்சம் கலந்த காதலர் பற்பலரின் வாழ்க்கையில் வெவ்வேறு காலத்து வெவ்வேறு சூழ்நிலையில் ஆங்காங்கு நிகழ்ந்து வரும் தனி நிகழ்ச்சிகளின் ஒரு கோவையாகும். சங்கப் பாடல்கள் இத்தனி நிகழ்ச்சிகளையே சித்திரித்துக் காட்டுபவை. இந்த எழு திணைகளையும் இணைக்கும் அடிப்படையே-பாலமே -உள்ளமும் உடலும் இரண்டுறவும் இரண்டறவும் கலந்த இன்பச் செவ்வியாகும். இதுவே அகம் என வழங்கப்பெறும், எழுதிணை களும் தமக்கியைந்த முறையில் தலையாய அகம் என்ற குறிக் கோளை உடன்பாட்டு எதிர்மறை முகங்களால் புலப்படுத்து கின்றன. உடன்பாட்டு முகம் உடைய ஐந்திணை இயல்பும் விரிவும் பெற்று அகத்திணையின் குறிக்கோளைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. - - அகத்தினை வடித்துக் காட்டும் காதற்பாங்கு தனித் துய்ை கொண்டது. மனித சமுதாயம் முழுவதையும் நோக்கு பான்மையது. இறைமையுடைய இக்காதற் பாங்கு சாதி சமய அரசு மொழி நாடு தொழில் செல்வம் என்பன போன்ற புறச்சார் o -- * - :- شیعه یعی ۱ ، ۱ گرم مم: பின்றி இலங்குவது. இரண்டு உயிர் மெய்களின் ஒருமையைக் காணும் பெற்றியதாகலின் இது மக்களாய்ப் பிறந்தார் அனை வர்க்கும் உரியதாகும்.