பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 அகத்திணைக் கொள்கைகள் என்பதில் ஊரார் தன்மகளைப்பற்றிக் கூறும் பழிச்சொல் சிறிதும் பொருந்தாது என்று பெருமிதம் தோன்றக் கூறுவள். அலர்த் துறைகளைப்பற்றிய சங்கப் பாடல்களில் வெகுளித் தோற்றத் துடன் கூடிய நற்றாயைக் காணலாம். தன்மகள் ஊர்வாய்ப் படுதல் கூடாது, தன் பழங்குடி ஒழுக்கம் வழுப்படுதல் கூடாது என்று கவலையுடன் இருப்பவள் சங்க இலக்கிய நற்றாய். இக் காரணத் தால்தான் தன் மகளை இற்செறிப்பு செய்கின்றாள்; வேறு விதமாகவும் அலைக்கின்றாள். இங்ஙனம் நற்றாயின் சிறப்புகளைச் சங்க இலக்கியங்களில், குறிப்பாக எட்டுத் தொகை நூல்களில், பல இடங்களில் கண்டு மகிழலாம். (ii) தலைவியின் தந்தை அகப்பொருள் இலக்கியங்களில் தலைவியின் - தந்தையைப் பற்றிய குறிப்புகள் மிகச் சிலவாகவே காணப் பெறுகின்றன. மகளைப் பெற்ற தந்தை தக்கான் ஒருவனுக்குத் தன் மகளை மணம் புணர்வித்தல் அவன் கடமையாக இருந்து வருவது தமிழ் மரபு. கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே’’’ என்ற தொல்காப்பிய நூற்பாவினால் இஃது அறியப்பெறும், ' கொளற்குரி மரபிற் கிழவோன் என்றதனால், ஒத்தகுலத் தானும் உயர்ந்த குலத்தானும் என்று கொள்க. கொளற்குரி மரபிற் கிழத்தி என்றதனால், ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளும் என்று கொள்க. "கொடைக்குரி மரபினோர்: என்றதனால், தந்தையும் தாயும் தன்னையரும் மாதுலனும் இவரில்லாத வழிச் சான்றோரும் தெய்வமும் என்று கொள்க’ என்ற இளம்பூரணரின் உரையும் ஈண்டு கருதத் தக்கது. கொடைக்குரி மரபினோரில் தந்தை முதலிடம் பெறுவதை அறிக. 29. கற்பியல்-1 (இளம்)