பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$50 அகத்திணைக் கொள்கைகள் என்று குறிப்பிட்டிருத்தல் வேண்டும் என்று எண்ணத் தோன்று கின்றது. தலைவியின் தந்தை செல்வம் மிக்கவன் என்ற குறிப்பு இலக்கியங்களில் காணப்பெறுகின்றது. செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்' என்ற நற்றிணையடியையும், இன்தீம் பலவின் ஏர்க்கெழு செல்வத்து எந்தையும்’ என்ற நெடுந்தொகை அடியையும் இதற்குச் சான்றுகளாகக் கொள்ளலாம். நெறியுடன் வாழும் குடும்பத்தில் தந்தையின் சொல்லுக்கே அதிக மதிப்பு இருந்ததாகத் தெரிகின்றது. தந்தையின் இசைவு இன்றி எந்தச் செயலும் குடும்பத்தில் நடைபெறாது. தலைவியின் திருமணம்பற்றிய முடிவு தந்தையின் முடிவாகவே இருக்கும். .................'ருந்தையும் மன்றல் வேங்கைக் கீழிருந்து மணநயந் தனன்நம் மலைகிழ வோற்கே" என்ற கலிப்பாட்டடிகளால் தந்தை வரைவுடம் பட்டமையைத் தோழி தலைவிக்கு அறிவிப்பதை அறிக தந்தை தன் மகள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினை, "நன்மலை நாடன் காதல் மகள்' மலையுறை குறவன் காதல் மடமகள்' "குன்றக் குறவன் காதல் மடமகள்' என்ற சங்க இலக்கியக் குறிப்பு களால் அறிந்து மகிழலாம். 38. நற் - 324 39. அகம் - 282 40. கலி - 41. 41. நற் - 44. 42. டிெ - 201. 43. இங்குறு-255, 256, 258, 259, 260.