பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 அகத்திணைக் கொள்கைகள் உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிதரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரிமெலிந் தொழியப் பந்தர் ஒடி ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி’ (பிரசம்-தேன்; விரிகதிர்-விரிந்த ஒளியினையுடைய, பூ தலை-மெல்லிய துணி, ஒக்குபு-ஒச்சி, புடைப்ப-புடைப் பாகச் சுற்றிய முத்து அரி-முத்துகளைப் பரலாக உடைய, தத்துற்று-பாய்ந்து பரீஇ - மெலிந்து ஒழிய-பற்றமுடி யாமல் மெலிந் தொழியுமாறு; ஏவல் மறுக்கும்-சொல்லு வதை மறுத்துஉரையாடும்; சிறு விளையாட்டி-சிறிய விளையாட்டினை உடையவள்.) தலைவி வரைந்தபின் இல்வாழ்க்கையின் மணமனைச் சென்று வந்த செவிலி பொற்றொடியின் கற்பியலை நற்றாய்க்கு உணர்த்துவதாக உள்ளது இப்பாடல். 'அன்டே உருவாய் తణ్భవతావణి ஒரு கையில் தேன் கலந்த இனிய பாற்சோறு நிட்ை". பொற்கலத்தையும்,மற்றொரு கையில் மெல்லிய கோலை யும் ஏந்தி வருகின்றாள். சிறு பிள்ளையான தலைவி சிலம்பொலிக்க விளையாடுகின்றாள். செவிலி அவளை நெருங்கிச் சோற்றை உண்ணுமாறு வேண்டுகின்றாள். மகள் மறுக்கின்றாள். ஆகவே தாய் அவளைப் பிடித்து உண்பிக்க முயலுகின்றாள். செவிலி தன்னைப் பற்ற வருவதறிந்து மெல்ல ஒடுகின்றாள் மகள். செவிலி யும் தொடர்ந்து ஒடியும் அவளைப் பிடிக்க முடியாமல் இறுதியில் இளைத்து நிற்கின்றாள். முன்றிலின்கண் போடப்பட்டிருக்கும் முல்லைப் பந்தரின் அடியில் ஒடியவள் உண்ணேன்' என்று மறுத் துரைத்து விட்டு ஆடத் தொடங்குகின்றாள். இங்ஙனம் தலைவி யின் இளமைப் பருவத்தின் நிகழ்ச்சி யொன்றால் அவள் செல்ல மாக வளர்க்கப் பெற்றதை அறிகின்றோம். அகநானூற்றிலும் இத்தகைய நிகழ்ச்சியொன்றினைக் காண் கின்றே ாம் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைந்து செவிலி கூறுகின்றாள். 47. நற்-110.