பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 அகத்திணைக் கொள்கைகள் போன்றவற்றைத் தலைவியின் களவு நெறியில் இவள் மேற் கொள்ளும் பொறுப்புகளாகும். தலைவி உடன் போக்கில் சென்ற விடத்து அவளைத் தேடியலைதல் செவிலியின் முக்கிய பொறுப் பாக அமைகின்றது. ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் தாமே செல்லும் தாயரும் உளரே." என்று இதற்கு விதிசெய்து காட்டுவர் தொல்காப்பியர். இங்குச் செவிலி கன்றுபிரி காராவின் நிலையினை அடைகின்றாள். - இலக்கியங்களில் இவற்றுக்குச் சான்றுகள் நிறையக் காணப் பெறுகின்றன. களவு நெறியில் பதின்மூன்று கிளவிகளை இவளு; குரியனவாகக்கூறுவர் தொல்காப்பியர்." கோழி தன் பார்ப்புகளை இறகிடை வைத்துப் பாதுகாப்பதுபோல் செவிலி தலைவியைப் பாதுகாப்பாள். இருவரும் ஒரே படுக்கையில் கூட இருப்பர் என்ற குறிப்புகளையும் இலக்கியத்தில் காண்கின்றோம். செவிலி கூற்றாக வரும் பாடல்களிலெல்லாம் இத்தகைய குறிப்புகளைக் காணலாம். ஐங்குறு நூற்றில் பாலைத் திணையில் மகட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து' என்ற தலைப்பில் வரும்பத்துப் பாடல்களில் உடன் போக்கிற் சென்ற தலைவியை நினைந்து வருந்தும் செவிலி நற்றாய் இவர்களின் பல்வேறு உணர்ச்சி நிலைகளைக் காணலாம். தலைவி கற்புக்கடம் பூண்ட செய்தியைத் தகுந்ததொரு செவ்வி யில் அறத்தொடுநிலை வகையாற் கூறித் தம் இல்லத்தே நன் மணம் நிகழ்விக்க வகைசெய்யாமல் அவள் தலைவனுடன் போந்துணையும் வாளாவிருந்த தன் மகளாகிய தோழியை வெறுத்துத் தன்னைத் தேற்றுவார்க்குச் செவிலி நொந்து கூறும் வகையில் உள்ள ஒரு பாடல் இது. அத்த நீளிடை யவனொடு போகிய முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல் 49. அகத்திணை-40 இளம்). தாயர்' எனப் பன்மை கூறித் "தாமே எனப் பிரித்ததனால் சேரிக்கு நற்றாய் சேறலும் தரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி விழக் கிற்குச் சிறந்ததென்று உணர்க' என்பர் நச்சினார்க் கினியர். 50. களவியல்-25 (இளம்) 51. பாலை-38வது பத்து.