பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 357 பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை ஒமை குத்திய வுயர்கோட்டு ஒருத்தல் வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் மழைமுழங்கு கடுங்குரல் ஒர்க்கும் கழைதிரங்கு ஆரிடை அவனொடு செலவே' (மேவாள் - விரும்பாள்; அயர்வோள் - விளையாடியவள்: முளிசினை-உலர்ந்த கிளை ஒருத்தல்-ஆண் யானை (களிறு); வெ அரை கவாஅன்-வெம்மையான அடிவாரம்: மழை-மேகம்; ஒர்க்கும்-கேட்கும்; கழை-மூங்கில், திரங்குஉலர்ந்த . இதில் செவிலி தலைவியின் இளமைத் தன்மையையும் பாலையின் கொடுமையையும் நினைந்து வருந்துவதைக் கண்டு தெளிக. இங்ஙனமே, அகநானூற்றுச் செவிலியும் தலைவியின் மென்மைத் தன்மையையும் அருஞ்சுரத்தின் கடுமையையும் நினைந்து நினைந்து உருகுவதை, வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினும் இளந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும் உங்ங்கின்று அன்னைஎன் மெய்என்று அசைஇ, மயங்குவியர் பொறித்த நுதலள் தண்ணென முயங்கினள் வதியும் மன்னே ... . . நொதும லாளன் நெஞ்சறப் பெற்றஎன் சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி வல்லகொல் செல்ல .......... அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின் நீளரை இலவத் துாழ்கழி பன்மலர் விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதுர் நெய்யுமிழ் சுடரில் கால்பொரச் இல்கி வைகுறு மீனில் தோன்றும் மைட்டு மாமலை விளங்கிய சுரனே" 55. குறுந் 396 56. அகம்-17