பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ஐந்திணைச் சூழல் - 21 என்ற சிறு பொழுதையும் புணர்ச்சிக்கு உரிய காலமாகக் கூறுவர் அன்னோர். முன் பனிக் காலத்தையும் இதற்கு உரியதாகக் கொள்ளினும் அஃது அத்துணைச் சிறப்பன்று." குறிஞ்சித் திணையைப் பாடுவதில் கபிலர் என்ற சங்கப்புலவர் தலைசிறந்த வராகத் திகழ்வதை அவர்தம் அகத்தினைபற்றிய பாடல்களால் அறியலாம். இவர் பாடிய அகப்பாடல்கள் 197. இவரே மிகுதி யான அகப்பொருள் பாடல்களை யாத்தவர். இவற்றுள் 182 களவிற்கும், 12 கற்பிற்கும், 3 கைக்கிளைக்கும் உரியவை. - பாலை நிலம் : காதலால் கூடிக் கலந்த இருவரது பிரிவு ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத் திணை. பிரிந்து செல்லும் இடத்தின் இடர்ப்பாடுகளை அதிகமாகக் காட்டக் காட்டப் பாட்டின் சுவை பன்மடங்கு அதிகமாகும். எனவே, அதற்கேற்ற நிலைக்களத்தை, சூழ்நிலையைக் கவிஞர்கள் தேர்ந்தெடுக் கின்றனர். கோடைக்காலத்தில் எங்கும் வெப்பம் பொறுக்க முடியாத நடுப்பகலில் மரங்களெல்லாம் காய்ந்து கரிந்து நிற்கும் வெஞ்சுரம், மழையே இல்லாத கொடிய நிலம். குடிநீர் என்பது அங்குக் குதிரைக் கொம்பு. பாலை நிலத்தின் கொடுமையை அசதிக் கோவையாசிரியர் மிக நயமாகக் காட்டுவர்: முத்தமிழ்நூல் கற்றார் பிரிவும்கல் லாதார் இணக்கமும் கைப்பொருளொன்(று) அற்றார் இளமையும் போலக் - கொதிக்கும் அருஞ்சுரமே. - என்று கூறியிருக்கும் அருமைப்பாட்டைச் சுவைத்து இன்புறுக. இத்தகைய கொடிய பாலை நிலத்தில் கானலை நீர் என்று மயங்கி யானைகள் அதைப் பருக ஆசைப்படும். கொழுத்திருந்த யானைகள் இளைத்து நிலத்தை உழும் கலப்பைபோல் மருப்பு ஊன்றி நிலத்தில் கிடக்கும். கொடிய வேடர்கள் அங்கு இருப்பர். அவர்கள் கட்டமைந்த உடலை யுடையவர்கள். சுற்றுகள் பொருந்திய வில்லையேந்திய கையினை உடையவர்கள்; வழிப் போக்கர்கள் வரும் சமயம் பார்த்துக் கொண்டு வழிமேல் விழியை வைத்துக் காத்திருப்பவர்கள். அவர்களிடம் பொருள் இல்லா விட்டாலும் அவர்கள் உடல் துடித்துச் சாதலைக் கண்டு மகிழ்ச்சி கொள்பவர்கள். பாலைக்குப் பெரும் பொழுது இளவேனிலும் 3. அகத்திணை - 7 (இனம்) 4. டிெ 8 (இளம்)