பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 அகத்திணைக் கொள்கைகள் (கால் - அடியில் யாத்த கட்டப்பெற்ற: கோடை - மேல் காற்று, ஒற்றினும் வீசினாலும்; கவணை - கவன்; பூட்டு - பிணிப்பு: பொருது பொருதமையால், அசா . வருந்துதலையுடைய உமண் எருது - உப்பு வாணிகரின் எருதுகள், ஒழுகை - வண்டிகளின் தோடு - தொகுதி, முளி சினை - உலர்ந்த மரக்கிளை முன்பு - வலிமை, கை . துதிக்கை உயவும் - வருந்துகின்ற; கானம் - பாலை நிலம்) 'தலைவி உம்முடன் வந்தால் பாலைநிலமும் இனியதேயாகும்' என்று கூறுகின்றாள் தோழி. 'தும்மொடு வாராளாயின் விடும் இன்னாத தாகும்' என்பது குறிப்பு. இதில் தோழி தலைமகனை உடம்படுத்திய திறம் பாராட்டத் தக்கது. உடன்போக்கில் தலைவனுடன் போகும்படி உய்க்கும் தோழி ஒம்படை செய்யும் நிகழ்ச்சியைக் கூறும் பாடல் இது: அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேள் ஊர!” |அண்ணாத்தல் - நிமிர்தல்; வனம் - அழகு, நீத்தல் ஒம்பு - கைவிடாது பாதுகாப்பாய்) இதில் தோழி. இவளை முதுமை எய்தினும் கைவிடாது பாதுகாப் பாயாக’’ என்று கூறுதல் நம் மனத்தை உருக்குகின்றது. தலைவி பால் தோழி எவ்வளவு பற்றும் பாசமும் கொண்டிருக்கின்றாள் என்பது தெளிவாகின்றது. கிட்டத்தட்ட இதே கருத்தினைக் கொண்ட குறுந்தொகைப் பாடலையும் காண்போம். இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக’ என்று தோழியின் கூற்றாக வரும் பாடல்: பெருநன்று ஆற்றின் பேணாரும் உளரே ஒருநன்று உடையள் ஆயினும் புரிமாண்டு புலவி தீர அளிமதி இலைகவர்பு ஆடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல் 92. நற் - 10