பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 அகத்திணைக் கொள்கைகள் தலைவனின் புறத்தொழுக்கத்தை நன்கு அறிந்த தலைவி வருத்தம் மிகுந்து உடல் மெலிவுற்றிருக்கின்றாள். இந்நிலையில் தன் தீயொழுக்கத்தைத் தலைவி அறியாள் என எண்ணித் தான் தூயனே என்று தெளித்துக் கூறுவதைக் கேட்கின்றாள் தோழி அவனுக்கு மறுமாற்றம் உரைக்கும் முறையில் வரும் பாடல் இது: பகல்கொள் விளக்கோ டிராநாள் அறியா வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம்பெறு சுடர்நுதல் தேம்ப எவன்பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே?’ ’ (சுடர்நுதல்-ஒளியையுடைய நெற்றி: தேம்புதல்-ஒளி மழுங்குதல்; தேற்றிய மொழி-தெளிவுறுத்திக் கூறிய சொல், ஆமூர்-சோழ நாட்டின் கண்ணதாகிய ஒரூர்.) பண்டு (களவில்) நீ செய்த தேற்றுரையால் நலம் பெற்ற இவள் நுதல், நீ அவ்வுரை பொய்ப்ப ஒழுகுவதனால் இன்று அழகிழந்து ஒளி மழுங்குவதாயிற்று. நின் தெளிவுரைகள் பயனில் பொய்ம் மொழிகளேயாகும்’ என்று கூறி வாயில் மறுக்கின்றாள். பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனைத் தலைமகள் புலந்து கொள்ளுகின்றாள். இதனைத் தோழியினால் தணிக்கக் கருதி அவள்பாலுறுகின்றான். தோழி தலைவியின் ஊடல் தீரும் வண்ணம் அவனைக் கடிந்து கூறித் தெருட்டுவதுடன் வாயிலும் நேர்கின்றாள். அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர! நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் - - மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே." 95. ஐங்குறு-56 96. நற். 210,