பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 அகத்திணைக் கொள்கைகள் தலைவனின் பெருமைக்கு இழுக்காகாது. இன்னொருத்தி தலைவி அங்ஙனம் தன்னை இகழ்ந்து கூறியதாகக் கேட்டு, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றேம்; அவள் வல்லளாயின் தலைவனை என்னிடமிருந்து மீட்டுக் கொள்வாளாக” என் கின்றாள்.' தலைவியொருத்தி தன் கணவனைக் காதற்பரத்தை வலிதின் நயப்பித்துக் கொண்டாள் என்பதாகப் பழி கூறுகின்றாள். அதனைச் செவியுற்ற அப்பரத்தை "வாளைமீன் தானிருந்த இடத்திலிருந்தே முயற்சியின்றித் தேமாங் கனியைப் பெற்றது போல் நானும் முயலாமலே தலைவனைப் பெற்றேன். அவன் என் பால் வலிய வந்தானேயன்றி யான் நயப்பிக்க வந்தான் அல்லன்: என்கின்றர்ள்.'" மற்றொரு பரத்தை தலைவிக்குப் பாங்கா யினார் கேட்ப இவ்வாறு கூறுகின்றாள்: "தலைவன் ஈண்டு எம்மொடு கூடாது வாளாவிருப்பின் இரண்டுடலை உடையேமா யும், கூடின் ஒருடலையுடையேமாயும் உள்ளேம். ஆதலின் அவன் கருத்திற்கேற்ப ஒழுகுதலன்றி யாம் வலிந்து அவனைச் கொண்டிலம்” என்கின்றாள். இங்கு, பொய்கை யாம்பல் அணி நிறக் கொழுமுகை, வண்டுவாய் திறக்கும் செய்தி கூறப்பெற். றுள்ளது. ஆம்பற்போது மலரும் செவ்வியறிந்து வண்டு வாய் திறக்கும்; தலைவன் பரத்தையுடன் இருக்குங்கால் அவள் உள்ளக் கருத்துக்கு ஏற்ப ஒழுகுவான் என்ற குறிப்பு இந்த உள்ளுறை யினால் பெறப்படுகின்றது. தலைவன் ஒருவன் காதற் பரத்தை யொருத்தியை மணம் புணர்ந்து கொண்டான். இதனைக் கேள்வியுற்ற தலைவி புலந்து கூறுகின்றாள்: - வடுபுனல் வையை வார்மணல் அகன்றுறைத் திருமரு தோங்கிய விரிமலர்க் காவின் தறும்பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு வதுவை அயர்ந்தனை என்ப; அலரே

  • * * & so do * - to 粤够物 «, 4 % * ~ *

117. ബ്ല.-80. 118. டிெ-164