பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 அகத்திணைக் கொள்கைகள் சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின் தெற்றென இlஇயரோ ஐய மற்றுயாம் நும்மொடு தக்க வால்வெள் எயிறே: பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல எமக்கும் பெரும்புல வாகி நும்மும் பெறேளம் இரீஇயர்எம் உயிரே 艾盔氯 (சுரம்-பாலை நிலம்: கல்-மலை; கோடு-கொம்பு; தெற் றென-விரைவாக: இlஇயர்-முறிவனவாக; எயிறுபற்கள்; புலவாகி-வெறுப்பைத் தருவதாகி, நும்மும்தும்மையும்: இரீஇயர்-அழிக) இதில், நும்மொடு நகை செய்த பற்கள் மலையைச் குத்திய யானையின் கொம்பைப்போல் முறிவனவாக எம் உயிரும் மீன் நாற்றத்தைப் பெற்று வெறொன்றுக்கும் பயன் படாத பாணர் மண்டை (வாயகன்ற பாத்திரம்) போல் எமக்கே வெறுப்பு தருவ தால், நும்மையும் பெறாமல் அழிவதாகுக' என்று தலைவி வெறுப்புடன் கூறுவதைக் காண்க. இங்ஙனம் தலைவி ஊடலைக் காட்டும் இடங்கள் சங்க நூல்களில் அதிகமாகக் காணலாம். இனி, காதற் பரத்தையர் தலைவியுடன் எத்தகைய பகையும் கொள்ளாது, இயலுமிடங்களில் அவர்களுடன் நெருங்கிப் பழகு வதையும் இலக்கியங்களில் காணலாம். அகநானூற்றுக் காதற் பரத்தை யொருத்தி தலைவியை அணுகி, - மையீர் ஓதி மடவோய்! யானுநின் சேரி யேனே அயலி லாட்டியேன் நுங்கை யாகுவென நினக்கெனத் தன்கைத் தொடுமணி மெல்விரல் தண்ணெணத் தைவர துதலும் கூந்தலும் நீவிச்’’’ |மை ஈர்-கரிய பெரிய, ஓதி கூந்தல்: அயலிலாட்டியேன்அயல் மனைக்கு உரியவள், நுங்கை-உனக்குத் தங்கை; தொடுமணி மெல்விரல்-மோதிரம் அணிந்த மெல்லிய விரல்: தைவர-தடவ1 121, குறுந்-169 122. அகம்-382.