பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தினைச் சூழல் - 23 சூழ்நிலையில் தலைவி தன் பிரிவை எண்ணி ஆற்றாது வருந்து வாள் என்று தலைவன் கலக்கமுற்றுப் பிறகு தேறித் தெளிவ தாகவும் தலைவி தன் கூந்தலில் முல்லை மலர்களையும் சூடாது தலைவன் வந்து விடுவான் என்று ஆற்றியிருப்பதாகவும், வினை முற்றிய தலைவன் இக்காலம் தனித்திருப்பார்க்கு வருத்தத்தைத் தரும் என்று வீட்டிற்கு விரைந்து வருவதாகவும் பொருள் அமைத்துக் கவிதைகளைப் புனைவர் புலவர் பெருமக்கள். ஐங்குறு நூற்றில் பேயனர் பாடிய 100 பாடல்களும் கலித்தொகையில் சோழன் நல்லுத்தின் பாடிய 17 பாடல்களும் முல்லைத் திணை யொழுக்கத்தைக் கற்பார்க்கு நல்விருந்தாக அமைவன. 'வயல் சார்ந்த இடம் (மருதம்) : வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். என்றும் வற்றாத நீரையுடைய ஆறு கால் விளைபொருள்களைக் குன்றாது நல்கும். இங்கு வாழும் உழவர் கட்கு ஒய்வு நேரம் அதிகம் இருக்கும்; ஒய்வு நேரத்தை அவர்கள் இன்பத்திலும் களியாட்டத்திலும் கழிப்பர். மணிமேகலை ஆசிரியர் போகம் புரக்கும் உழவர்' என்று இவர்களைக் குறிப் பிடுவர். இந்தப் பகுதியில் காணப்பெறும் குளங்களில் நீர் நிறைந்து அதில் செவ்வாம்பலும் தாமரையும் அழகு பெறத் தோன்றும். நீரில் சிறுமீன்கள் துள்ளிப் பாயும். கொக்குகள் கூம்பியிருந்து மீன்களைப் பிடித்துச் செல்லும். எருமைக்கடாக்கள் குளத்துள் பாய்ந்து நீந்தித் தம் களைப்பை ஆற்றிக் கொள்ளும் ஆங்குள்ள செங்கழுநீர் இலைகளையும் உணவாகக் கொள்ளும். ஊர்களில் உள்ள வீடுகளின் முற்றங்களில் கன்றுகள் வரிசையாகக் கட்டப்பெற்றிருக்கும். அவை செங்கழுநீர், நெய்தற் பூக்களைத் தின்னும் அவை தின்று மீந்தவற்றை உழுது திரும்பிவரும் எருமைகள் தின்னும். வெட்ட வெளியில் மணற்பரப்பில் தெற் சூடு வைக்கப் பெற்றிருக்கும். உழைத்த எருமைகள் மருதமரத்து நிழல்களில் படுத்து இருக்கும். நெல் அரிபவர்களின் பறையொலி கேட்டுப் பறவைகள் கலைந்து பரந்து செல்லும். இத்தகைய வளம் நிறைந்த மருத நிலத்தில் வாழ்பவர்களிடையே விலை மகளிருடன் இன்பம் நுகரும் வழக்கமும் இருக்கும். இதைக் கேட்ட தலைமகள் தன் கணவன் இல்லம் திரும்புங்கால் ஊடல் கொள் வாள்; அவனுடன் பிணங்கிக் கொள்வாள். அவளுடைய பிணக்கைத் தீர்ப்பதற்காக வாயில்களாகச் சிலர் தோன்றுவர். இவ்வாறு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு மனக்களிப்பிற்காக