பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 அகத்திணைக் கொள்கைகள் கொண்டு பாடவல்லவனாதலின் இவன் யாழ்ப்பாணன் எனவும் வழங்கப்பெறுவான். கைகவர்நரம்பிற் பனுவற் பாணன்' என்று நற்றிணையிலும், 'முல்லை நல்யாழ்ப் பாணன்' கைவல்ஒறி யாழ்ப் பாணன்' என்று ஐங்குறுநூற்றிலும் பிற இடங்களிலும் இவனைப்பற்றிய குறிப்பு வருதலினின்றும் இதனை ஒருவாறு அறியலாம். அகப்பாடல்களில் காணப்பெறும் இவன் தலைவனைப் பரத்தையரிடம் கூட்டி வைப்பதற்குக் கருவியாக அமைபவன். அகத் திணைத் தலைவன் திருவொடு பொருந்தி வாழ்வன் என்பதனை நாம் அறிவோம்; பரத்தையிற் பிரிவு இவன் வாழ்வையொட்டியது. என்று இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. சில சமயங்களில் பாணன் தலைவனைப் பரத்தையுடன் கூட்டிவைப்பதற்குக் கருவி யாகவும் இருப்பான். இதனால் தலைவி பாணனிடம் பெரும் பாலும் வெறுப்புக் கொண்டவளாகவே இருப்பாள். இருப்பினும், அவனிடம் நாகரிகத்துடனேயே பேசுவாள். தன் கணவனின் பரத்தமைக்கு வாயிலாக அமைந்த பாணனைத் தலைவி பழிந் துரைப்பதாகவுள்ள பாடல் ஒன்றில் இத்தகைய நாகரிகப் பேச்சினைக் காணலாம். ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையர்தம் வீட்டிருந்து பாட விடிவளவும்-காட்டிலழும் பேயென்றாள் அன்னை; பிறர்நரியென் றார்;தோழி நாயென்றாள்; நீயென்றேன் நான்.”* தலைவியின் வெறுப்பு எள்ளல் குறிப்பாக வெளிப்படுவதைப் பாடலில் கண்டு மகிழ்க. தோழியின் இகழ்ச்சிக் குறிப்பினை இன்னொரு பாடலில் காண்போம். தலைவன் புறத்தொழுக்கத் தில் நெடுநாள் ஒழுகுகின்றான். பிறகு இது தகாது’ என்று தெளிந்த மனத்தனாய் மீண்டும்தலைவியுடன் கூடிவாழ்கின்றான். பாணனே தலைவனின் பரத்தை வாழ்க்கைக்குக் கருவியாக இருந் தான் என்பதைத் தோழி நன்கு அறிவாள். ஒருநாள் தோழியுடன் சொல்லாடிய தலைவன் தன் புறத்தொழுக்கத்தின்பொழுது தன்னைப்பற்றி அவர்கள் நினைத்த திறம் யாது என வினவிய பொழுது அவள் கூறும் விடையாக அமைந்த பாடல் பகுதி இது. 20. தற்-200 21. ஐங்குறு-478 22. ു.-472 23. நந்திக் கலம்பகம்-106