பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 அகத்திணைக் கொள்கைகள் என்ற நூற்பாவால் பார்ப்பார்க்குரிய கிளவிகளைத் தொகுத்துக் கூறுவர் தொல்காப்பியர். காமநிலை உரைத்தல் என்பது, நீ பிரியின் இவள் காமம் மிகும்’ என்று கூறுதல். தேர்நிலை உரைத்தல் என்பது, ஆராய்ச்சி நிலையாற் கூறுதல். கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் என்பது, தலைவன் குறிப்பினைத் தலைவிக்கு விளங்கக் கூறுதல், ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் என்பது, பசுவுடன் பொருந்திய நிமித்தங்களைக் கூறுதல். செலவுறு கிளவி என்பது, தலைமகன் பிரிந்து ஏகினான் என்பன போன்று கூறுதல். செலவழுங்கு கிளவி என்பது, பிரிந்து ஏகுதலைக் தவிர்க்க வேண்டும் எனக் கூறுதல். இவற்றிற்கெல்லாம் இலக்கியம் காண்டல் அரிது. ஐங்குறு நூற்றில் இடைச்சுரத்துச் செவிலியால் வினவப்பட்ட அந்தணர் அவளுக்குச் சொல்லியதாக ஒரு பாடல் வருகின்றது. அந்தணர் என்பதற்குப் பார்ப்பனர் என்று கொண்டால், அவர்கள் கூற்றுக்கு இப்பாடல் பொருத்தமாகலாம். 'அறம்புரி அருமறை நவின்ற நாவில் திறம்புரி கொள்கை அந்தணிர் தொழுவல்' (திறம்புரி கொள்கைகற்றாங்கு ஒழுகும் ஆற்றலையுடைய) என்று விளித்து அவர்களிடம் தன் மகளைப் பற்றி வினவுகின்றாள் செவிலி. அவர்கள், * “.........-பேதைஅம் பெண்டே, கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை இன்துணை இனிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கல் மலையிறந்தோளே” (அம்ம-கேட்பாயாக இன்துணை-மனக்கினிய காதலன்; பிறங்கல்-விளங்கா நிற்கும்: இறந்தோள்-கடந்தோள்) என்று கூறுகின்றனர். இதில் பேதைப் பெண்ணே, அவளைக் கண்டோம். இனிய துணைவன் அவளை இனிது பாராட்ட மலைகளைக் கடந்து சென்றாள் ' என்று அவர்கள் கூறுவதைக் காண்க. இளம்பூரணரும் எஞ்சியோர்க்கும்' என்ற நூற்பாவின் கீழ்ப் பார்ப்பார் கூற்றாகக் காட்டும் இங்குறு நூற்றுப் பாடல் இது, 31. ஐங்குறு-387. 32. அகத்திணை-45 (இளம்)