பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாடல்கள் - 419 யும்’ என்பதிலுள்ள எச்ச உண்மையால் கைக்கிளை, பெருந்திணை என்ற திணை நிகழ்ச்சிகளைச் சுட்டும் பாடல்களிலும் இயற் பெயர்கள் வருமாறு பாடும் மரபு இல்லை என்பது பெறப்படு கின்றது. அகத்திணையை நுணுகி ஆராயின் ஏன் இவ்வமைப்பு ஏற்பட்டது என்பது தெளிவாகும். முதலாவது : தனிப்பட்டோர் வாழ்வில் காணப்பெறும் காதலுறவுகள் அனைத்திலும் இனியனவாகச் சுட்டக் கூடிய நற்கூறுகள் யாவும் நிரம்பியிருக்கும் என்று சொல்ல இயலாது. இலக்கியத்திற்கு அவை குறைவற்ற எடுத்துக் காட்டுகளாகும். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்த ஒரு கலவையா தலின், இலக்கியப் புலவன் சமுதாயத்தில் பல்வேறுபட்ட நிலைகளில் வாழும் காதல் மாந்தர்களிடம் காணப்பெறும் நற்காதற் கூறுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு பண்பும் பதமும் இனிமையும் கொண்ட இலக்கியத்தைப் படைப்பான் என்று திறனாய்வாளர் காட்டும் உண்மையையே அக இலக்கியம் நமக்குக் காட்டுகின்றது. ஆகவே, ஒரு காதல் நிலையில் ஆண்பாலார் பெண்பாலார் பலருடைய உள்ளோட்டங் களை வெளிப்படுத்துவது அகத்திணையின் பண்பாகும் என்பது அறியப்படும். பெயர் சுட்டப்பெறாமையால் மக்களனைவரின் காதல் மனங்களை அது நமக்குக் காட்டுகின்றதேயன்றி தனிப் பட்டோரின் மனங்களை அன்று. பல்வேறு வாழ்வு நிலையுடைய மக்கள் குறிப்பிட்ட ஒரு காதல் நிலையில் எவ்வெவ்வாறெல்லாம் நினைப்பர், சொல்லுவர், செய்வர் என்ற உணர்வுத்திறங்களையே அகத்திணை சுட்டி உரைக்கின்றது என்பது உணர்ந்து தெளிய வேண்டிய தொன்றாகும். இரண்டாவது : அகப்பாடல்களில் முதல் கரு உரி என்ற மூன்று பொருள்களும் வரும் என்பதை நாம் அறிவோம். அங்ஙனம் வருங்கால் முதல் கரு என்ற இரண்டிலும் மக்களின் இயற்பெயர் களும் வரலாறுகளும் வரலாம்; உவமைப் பகுதிகளிலும் அவை வரலாம். ஆயின் உரிப்பொருள் கூறுமிடத்து அகத்திணை மாந்தர்களை இயற்பெயர்களுடன் வரலாற்றுச் சுவடு காணும் வகையில் சுட்டி உரைத்தலாகாது. காரணம், அகம் என்பது உரிப் பொருள். தனிப்பட்டோர் வாழ்க்கையில் காணும் மெய்யான நிகழ்ச்சிகளையே அகப் புலவன் பாடினும், அவை தூய முதல் நிலையில் வைத்து பொது நிலைக்கு உயருமாறு பாடப்பெறும். அகத்திண்ை மாந்தர் கூற்றுகளில் யாண்டும் மக்களின் இயற்