பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 அகத்திணைக் கொள்கைகள் இல்லனவும் கூறுதலின்றி யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறார். என்றற்கே நாடகம்' என்னாது வழக்கு என்பாராயிற்று' என்றும் "இப் புலனெறி வழக்கினை இல்லது இனியது புலவரால் நாட்டப் பட்டது என்னாமோ எனின், இல்லது என்று கேட்டோர்க்கு மெய்ப் பாடு பிறந்து இன்பம் செய்யாதாகலானும், உடன் கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல் வேண்டுமாகலானும் அது பொருந்தாது, என்றும் கூறியுள்ளதை நாம் சிந்தித்து அறிதல் வேண்டும். எனவே, தொல்காப்பியர் கூறியுள்ள அகப்பொருள் விகற்பங்கள் யாவும் புனைந்துரை வகையால் புலவர்கள் பாடி வைத்த உலகியல்களே என்பது வெளிப்படை. கூற்று நிகழும் முறை: அகத்திணை முற்றும் கூற்று வகை யால் அமைந்த நாடகப் பாங்கினது. பாடல்களைப் பாடும் புலவனும் பாத்திரங்களோடு ஒன்றிவிடும் நாடகப் புலவனைப் போலவே தன் சுவடு தோன்றாது தன்னை ஒளித்து அழித்துக் கொள்கின்றான். தன்னிலை தோன்றப் பாடும் வழக்கம் அவனிடம் இல்லை. கூற்றோடு வேற்றுமையின்றிக் கலந்து விடு கின்றான். நாடகத்தில் வரும் மாந்தர்கட்கு மக்கட் பெயர்கள் இருப்பது போல அகத்திணை மாந்தர்கள் மக்கட் பெயர்களைப் பெறார். களவில் கூற்று நிகழ்த்தற்குரியர் பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி ஆகிய அறுவர் என்பதை, பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு அளவியல் மரபின் அறுவகை யோரும் களவினிற் கிளவிக் குரியர் என்ப. என்ற நூற்பாவால் அறிகின்றோம். இங்ஙனமே, பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்." என்ற நூற்பா கற்பின்கண் கூறத் தகுவாரை பாணன், கூத்தன், விறலி, மரத்தை, அறிவர், கண்டோர் என்பதாகச் செப்புகின்றது. ஆனால் ஊரார், அயலார், சேரியார், நோய் மருங்கறிநர் தந்தை, 7. செய்யு. 181|இளம் 8. டிெ - 182 醬 )