பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 的 w * * al நிலங்களும் ஒழுக்கங்களும் 2. இறாஅல் அருந்திய சிறுகுரல் மருதின் தாழ்ச்சினை உறங்குந் தண்துறை ஊர" என்ற வழி தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையாலும், பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீன் இருங்கழி ஒதம் மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்" என்ற வழிப் பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையானும் இந் நிலங்களை இவ்வாறு குறியிட்டார் என்று கொள்ளப்படும். 'பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற் காலம் பற்றி வருதலின் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை என்பதோர் மரம் உண்டாகலின், அச்சிறப்பு நோக்கிப் பாலை என்று குறியிட்டார்' என்பது. மேலும், ‘கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு" 'மருதம் சான்ற மருதத் தண்பனை’’ 'முல்லை சான்ற முல்லையம் புறவு பாலை சான்ற சுரம்’ என்று சான்றோர் செய்யுட்களிலும் க அல்லது அதன் முதற் பொருளின் சிறப்புப்பற்றி அந்நிலங்கள் கூறப்பெறுதலை அறிக’ இறையனார் களவியலுரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் இந்நிலப் பெயர்கள் அவற்றின் ஒழுக்கமாக-உரிப் பொருள்களின் அடியாக-வழங்கலாயின என்று கூறுவர். அதாவது, முல்லைக் குரியதாகப் புலனெறி வழக்காகச் செய்யப்பட்ட ஒழுக்கம் 'இருத்தல்' என்பது; இவ்விருத்தற்கே 'முல்லை என்பது ஒரு பெயர் என்பதாகும். களவியலுரையாசிரியர், 'ஒழுக்கமே திணை எனப்படும். குறிஞ்சியாகிய ஒழுக்கம் நிகழ்ந்த நிலமும் குறிஞ்சி எனப்பட்டது. என்னை? விளக்காகிய சுடர் இருந்த இடனும் விளக்கு எனப் பட்டது போல என்பது' என்று கூறியுள்ளதைக் கர்ண்க." ஏனைய நிலங்கட்கும் இவ் 4. அகம்-286 5. குறுந்-9 - 6. மதுரைக். அடி 300 7. சிறுபாண். அடி 186 8. டிெ, அடி 169 . மதுரைக் அடி. 314 9 0. இறை, கள. -இன் உரை 1 G