பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 . : அகத்திணைக் கொள்கைகள் அம்ம வாழி தோழி நன்று எய்யா மையின் ஏதில பற்றி அன்பிலன் மன்ற பெரிதே மென்புலக் கொண்கன் வாரா தோனே.” [எய்யாமை-அறியாமை; ஏதில-வீண் செயல்கள்: பற்றி-மேற் கொண்டு மென்புலம்-உறுதியற்ற நிலம்: நெய்தல் நிலம்) களவுத் தலைவியின் வாழ்க்கையில் இற்செறிப்பும் அலரும் நிகழ் கின்றன. தலைவி விரைவில் வரைந்து கொள்ளுமாறு குறிப் பாகப் புலப்படுத்தியிருப்பவும் வரையாது காலங்கடத்துகின்றான். களவின்பத்தையே விரும்புபவன்போலும் இவன். இத்தலைவன் ஒருநாள் சிறைப்புறத்தே வந்துழி தலைவி அவனைக் காணாதாள் போன்று அவன் கேட்பத் தோழிக்குக் கூறுவதாக அமைந்தது இப்பாடல். . பொய்யா மரபின் ஊர்முது வேலன் கழங்குமெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி முருகென மொழியும் ஆயிற் கெழுதகை கொல்லிவள் அணங்கி யோற்கே. (மரபு-முறை: மெய்ப்படுத்து-ஆராய்ந்து உண்மையினை வெளிப்படுத்தி: கன்னம்-தாயத்து போன்ற ஒருபொருள்; அணங்கிய-வருத்தியர் தலைவன் சிறைப்புறத்தானாக உள்ளான். தோழி வெறி யெடுப்பதை அவன் கேட்பத் தலைவனுக்கு உணர்த்தி வரைவு கடாவுகின்றாள். இதன்கண், செவிலி வெறியாடலுறுகின்றாள், ! ஆனால் தலைவியின் துயரம் மிகும், பெருநாணினள் ஆதலின் இறந்துபடுதலும் கூடும், ஆதலான் விரைந்து அவளை வரைந்து கொள்ளவேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் பொருளாகும். அறஞ்சா லியரோ அறஞ்சா லியரோ வறன்உண் டாயினும் அறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற அருவிக் கோள்வல் என்னையை மரைத்த குன்றே." 9. ஐங்-66 10. ബി.-119 11. டிெ-245 12. டிெ-312