பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 அகத்திணைக் கொள்கைகள் காட்சி-2 காலம் : மாலை. இடம் : முல்லை நிலத்தில் ஓர் சிற்றாற்று மணல் இடை. உறுப்பினர் : ஆயர் மகன், ஆயர் மகள். திகழ்ச்சி : யாதோ ஒரு வினை காரணமாகச் சென்று திரும்பும் ஆயர் மகன் ஒரு குளிர்ந்த பொழிலிடத்து ஆற்றிடையிலுள்ள ஓர் அகன்ற பாறையில் ஆயத்துடன் விளையாடித் தனியே வரும் ஆய்மகளைச் சந்திக்கின்றான். இருவரிடையே சொல் லாட்டம் நிகழ்கின்றது. ஆயர்மகன் : நலமிக நந்திய நயவரு தடமென்றோள் அலமால் அமருண்கண் அந்நல்லாய்! நீயுறிஇ உலமால் உயவுநோய்க்கு உய்யுமாறு உரைத்துச்செல். ஆயர்மகள் : போரேமுற் றார்போல முன்னின்று விளக்குவாய் யார்? எல்லா! நின்னை யறிந்ததுஉ மில்வழி. ஆ.மகன் : தளிரியால் என்னறிதல் வேண்டின் பகையஞ்சாப் புல்லினத் தாயர் மகனேன் மற்றுயான். ஆ.மகள் : ஒக்குமன், புல்லினத் தாயனைநீ யாயிற் குடஞ்சுட்டு நல்லினத்து ஆயர் எமர். ஆ.மகன் : எல்லா, நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லைமன். ஆ.மகள் : ஏதமன்று, எல்லை வருவான் விடு. ஆ.மகன் : விடேன், உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு மெல்லிய வாதல் அறியினும் மெல்லியால்! நின்மொழிகொண் டியானோ விடுவேன் மற்(று) என்மொழி கொண்டு) என்னெஞ்சம் ஏவல் செயின்,